நாட்டின் 74ஆவது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ டெல்லி செங்கோட்டையிலும், தமிழ்நாடு ஆளுநர் சென்னையிலும் தேசிய கொடியை ஏற்றினர். இதில் சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் தமிழ்நாடு வாழ்க என அணிவகுத்த வாகனம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
வழக்கமாக காந்தி சிலைக்கு முன் தமிழக ஆளுநர் தேசிய கொடியை ஏற்றி வைப்பார். ஆனால் அங்கு மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதால், இந்த முறை உழைப்பாளர் சிலை அருகில் கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர்.என் ரவி. அதன்பிறகு ராணுவப்படை, கடற்படைப்பிரிவு, வான் படை பிரிவு என மொத்தம் 49 அணிவகுப்புகள் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் இடம்பெற்றது. அதில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் பங்கேற்கும் வாகனத்தில் ’தமிழ்நாடு வாழ்க’ என்ற எழுத்தால் வரையப்பட்ட ரங்கோலி கோலத்தை முகப்பாக கொண்டு வடிவமைக்கப்பட்ட வாகனம் அணிவகுத்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
சுமார் 6800 போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நிலையில் தனது மனைவியுடன் வருகை தந்து கொடியை ஏற்றி வைத்தார் ஆளுநர்.
Ind vs Aus : இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி - கள்ளச்சந்தையில் டிக்கெட்டுகளை விற்ற 13 பேர் கைது
மது விருந்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை : தட்டிக்கேட்ட ஆண் நண்பருக்கு மண்டை உடைப்பு - சென்னையில் பகீர் சம்பவம்!
சென்னையில் மின் கம்பிகளை புதைவிட கம்பிகளாக அமைக்கும் பணிகள் தீவிரம்: அமைச்சர் தகவல்
சென்னையில் தொடங்கிய ஜி-20 நிதித்துறை சார்ந்த கருத்தியல் மாநாடு.. 80 பிரதிநிதிகள் பங்கேற்பு...
சென்னையில் 4 நாட்களுக்கு ட்ரோன் பறக்க தடை..!
பரோட்டாவுக்கு பாயா கேட்டு ஓட்டலில் ரகளை... 2 போலீஸ்காரர்கள் சஸ்பென்ட்.
சொத்து வரி கட்ட கடைசி நாள் இதுதான்... தவறினால் அபராதம்.. சென்னை மாநகராட்சி எச்சரிக்கை..!
ஐஸ்வர்யா வீட்டில் கொள்ளையடித்த பெண்.. ரஜினி, தனுஷ் வீடுகளிலும் கைவரிசையா?
மூலிகை ஆயில் பெயரில் மோசடி : தொழிலதிபர்களிடம் ரூ.20 கோடி சுருட்டிய நைஜீரிய கும்பல் - சிக்கியது எப்படி?
தலைநகரை கலைநகராக்கும் முயற்சி - மெரினா லூப் சாலையில் வண்ணங்களை தீட்டும் ஓவியர்கள்
ஒரு மாத ரகசிய விசாரணை.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டு கொள்ளையில் மேலும் ஒருவர் அதிரடி கைது!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Chennai, CM MK Stalin, Republic day, RN Ravi