Home / News / chennai /

கோயம்பேட்டில் தொடரும் வாகன திருட்டு.. சிசிடிவி காட்சிகள் இருந்தும் போலீசார் திணறல்

கோயம்பேட்டில் தொடரும் வாகன திருட்டு.. சிசிடிவி காட்சிகள் இருந்தும் போலீசார் திணறல்

கோயம்பேடு வாகன திருட்டு சிசிடிவி

கோயம்பேடு வாகன திருட்டு சிசிடிவி

ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் சர்வ சாதாரணமாக இளைஞர்கள் சிலர் வந்து இருசக்கர வாகனத்தை திருடி எடுத்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை குறிவைத்து திருடும் மர்ம கும்பலால் அந்த பகுதி மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது. இந்த வழக்கில்  தெளிவாக சிசிடிவி காட்சிகள் இருந்தும் போலீசார் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

கோயம்பேடு அடுத்த நெற்குன்றம், பகுதியில் வசித்து வருபவர் ஜாபர்(24). இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வேலையை முடித்து விட்டு தனது இருசக்கர வாகனத்தை கொண்டு வந்து தனது வீட்டு வாசலில் முன் நிறுத்திவிட்டு இரவு  தூங்க சென்றுள்ளார். பின்னர் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வரும் மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தை நோட்டமிட்டு சர்வ சாதாரணமாக காலால் வாகனத்தின் லாக்கை உடைத்து பின்னர் அங்கிருந்து வாகனத்தை எடுத்து செல்கின்றனர்.

ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் சர்வ சாதாரணமாக இளைஞர்கள் சிலர் வந்து இருசக்கர வாகனத்தை திருடி எடுத்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகள் மிக தெளிவாக பதிவாகி இருந்தும் கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் கோயம்பேடு போலீசார் திணறி வருகின்றனர். மேலும் அதே பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நான்கு விலை உயர்ந்த  இருசக்கர வாகனங்கள் திருடு போயிருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

உங்கள் நகரத்திலிருந்து (சென்னை)

முன்னாள் கள்ளக்காதலனை ஆண் நண்பருடன் இணைந்து கொலை செய்து நாடகமாடிய பெண் - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

நள்ளிரவில் பெண்கள் விடுதியில் புகுந்து கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது..!

விஜே சித்ரா தற்கொலை : ஹேம்நாத்துக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு

கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ விரிவாக்க பணிகள் : 10 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தகவல்

‘மனு தர்மம் எங்கே உள்ளது என கேட்பவர்களின் கவனத்திற்காக...’ திருமாவளவன் பகிர்ந்த புகைப்படம்

அதிக மணல் ஏற்றி சென்றதாக இதுவரை எத்தனை லாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? - தமிழக அரசிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

ஒரு அங்குலம் இடம் இருந்தாலும் தாவரம் வளர்க்க வேண்டும் - முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

ஆஞ்சநேயர் கோவிலில் ஆபாச படம் பார்த்து, அருவறுக்கத்தக்க செயலில் ஈடுபட்ட பட்டதாரி இளைஞர் கைது

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாஜக அரசு திருத்த நினைக்கிறது - ப.சிதம்பரம் பரபரப்பு குற்றசாட்டு

’அவருக்கு வரலாறும் தெரியல ; அரசியலும் தெரியல’ - அண்ணாமலையை சாடிய அமைச்சர் பொன்முடி..!

திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்குகள் ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

செய்தியாளர் சோமசுந்தரம்

Tags:Bike Theft, Koyambedu