PREVNEXT
முகப்பு / செய்தி / சென்னை / எம்.பி ஆகதான் காங்கிரஸை ஆதரிக்கிறேனா? கமல்ஹாசன் சொன்ன சூசக பதில்!

எம்.பி ஆகதான் காங்கிரஸை ஆதரிக்கிறேனா? கமல்ஹாசன் சொன்ன சூசக பதில்!

காங்கிரஸ் வெற்றிக்கு நானும், மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களும் வேண்டிய உதவிகளை செய்வோம் - கமல்ஹாசன்

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுகவின் தோழமைக் கட்சிகளை சந்தித்து தனக்கு ஆதரவு திரட்டி இருந்தார். அதுபோலவே மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனையும் சந்தித்து ஆதரவு கேட்டிருந்தார். நிர்வாகிகளுடன் கலந்துபேசி முடிவை அறிவிப்பதாக கமல்ஹாசன் கூறியிருந்தார்.

இதுகுறித்து இன்று காலை 11.30 மணிக்கு ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசன் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். முன்னதாக ராகுல்காந்தியின் தேசிய ஒற்றுமை பயணத்தில் கலந்துகொண்ட கமல்ஹாசன், ராகுல்காந்தியுடன் உரையாடலும் நிகழ்த்தி இருந்தார். நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணியில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுவதால், கமல்ஹாசனின் இன்றைய ஆலோசனைக் கூட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தார். காங்கிரஸ் வெற்றிக்கு தானும், மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களும் வேண்டிய உதவிகளை செய்வோம் என்று குறிப்பிட்ட அவர், தேர்தல் பொறுப்பாளராக அருணாச்சலத்தையும் நியமித்தார்.

உங்கள் நகரத்திலிருந்து (சென்னை)

மது விருந்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை : தட்டிக்கேட்ட ஆண் நண்பருக்கு மண்டை உடைப்பு - சென்னையில் பகீர் சம்பவம்!

சொத்து வரி கட்ட கடைசி நாள் இதுதான்... தவறினால் அபராதம்.. சென்னை மாநகராட்சி எச்சரிக்கை..!

சென்னையில் மின் கம்பிகளை புதைவிட கம்பிகளாக அமைக்கும் பணிகள் தீவிரம்: அமைச்சர் தகவல்

மூலிகை ஆயில் பெயரில் மோசடி : தொழிலதிபர்களிடம் ரூ.20 கோடி சுருட்டிய நைஜீரிய கும்பல் - சிக்கியது எப்படி?

ஐஸ்வர்யா வீட்டில் கொள்ளையடித்த பெண்.. ரஜினி, தனுஷ் வீடுகளிலும் கைவரிசையா?

சென்னையில் தொடங்கிய ஜி-20 நிதித்துறை சார்ந்த கருத்தியல் மாநாடு.. 80 பிரதிநிதிகள் பங்கேற்பு...

ஒரு மாத ரகசிய விசாரணை.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டு கொள்ளையில் மேலும் ஒருவர் அதிரடி கைது!

சென்னையில் 4 நாட்களுக்கு ட்ரோன் பறக்க தடை..!

தலைநகரை கலைநகராக்கும் முயற்சி - மெரினா லூப் சாலையில் வண்ணங்களை தீட்டும் ஓவியர்கள்

Ind vs Aus : இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி - கள்ளச்சந்தையில் டிக்கெட்டுகளை விற்ற 13 பேர் கைது

பரோட்டாவுக்கு பாயா கேட்டு ஓட்டலில் ரகளை... 2 போலீஸ்காரர்கள் சஸ்பென்ட்.

அப்போது எம்.பி ஆவதற்காகதான் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கிறீர்களா என செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “நான் ஏன் எம்பி ஆக கூடாது. கமல்ஹாசன் முதலமைச்சர் ஆக வேண்டும் என சொன்னதுக்கு கோவிக்காத நீங்கள் ‘மெம்பர் ஆஃப் பார்லிமெண்டு’ என சொல்லும்போது ஏன் கிண்டல் செய்கிறீர்கள்..” என கூறினார். மேலும் அப்படி இருக்கலாம் எனவும் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்ற ஆசையை சூசகமாக தெரிவித்துள்ளாரா கமல்ஹாசன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Tags:Erode Bypoll, Erode East Constituency, Kamal Haasan, Makkal Needhi Maiam

முக்கிய செய்திகள்