தொழிலதிபர் கடத்தப்பட்ட விவகாரத்தில் முன்ஜாமின் ஆவணங்களை நீதிமன்றத்தில் போலியாக சமர்ப்பித்த திமுக கவுன்சிலர் மற்றும் அவரது கணவரான திமுக வட்ட செயலாளர் ஆகியோரை நீதிமன்ற வளாகத்திலேயே எழும்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை சோழிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த நகைக்கடை தொழிலதிபர் அமரராம் என்பவரை மிரட்டி கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரைக்கு சிலர் வரச் செய்துள்ளனர். பின்னர் அங்கிருந்து தொழிலதிபரான அமரராமை காரில் கடத்திச் சென்று திருப்போரூர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று நாவலூரில் உள்ள தொழிலதிபர் அமரராமிற்கு சொந்தமான 58 சென்ட் அளவுள்ள 3 கோடி மதிப்பிலான நிலத்தை ரூ. 60 லட்சத்துக்கு எழுதி வாங்கியுள்ளனர்.
இதையும் படிக்க : சென்னையில் மாமூல் கேட்டு சலூன் கடை ஊழியர்களை தாக்கிய இளைஞர் - மேயர் பெயரை சொல்லி மிரட்டல்
74ஆவது குடியரசு தின விழா.. தேசியக் கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர். என்.ரவி!
அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை அகலப்படுத்த மத்திய அரசு அனுமதி!
எம்.பி ஆகதான் காங்கிரஸை ஆதரிக்கிறேனா? கமல்ஹாசன் சொன்ன சூசக பதில்!
குடியரசு தின அணிவகுப்பு : பரிசை தட்டிச்சென்ற காவல்துறை.. விருது வழங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி
''தமிழ்நாடு வாழ்க''.. குடியரசு தின விழாவில் செய்தித்துறை சார்பில் அணிவகுத்த வாகனம்!
மதுரை டூ சென்னை.. 2 மணி நேரத்தில் வந்து சேர்ந்த இதயம்.. பர பர நிமிடங்கள்..!
பள்ளி வாகன ஓட்டையில் தவறி விழுந்து உயிரிழந்த மாணவியின் வழக்கு.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
தேநீர் விருந்து : ஸ்டாலினுக்கு போனில் அழைப்பு விடுத்த ஆளுநர்.. பங்கேற்பாரா முதலமைச்சர்?
சென்னை : திருமணத்திற்கு சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு..
சென்னை: ரயில் முன் பாய்ந்த காதல் ஜோடி.. பலத்த காயத்துடன் உயிருக்கு போராடும் காதலன்!
மகனின் ஜாமீனுக்காக செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு.. சென்னையில் பரபரப்பு
இதனையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்ய போலீசார் சென்றபோது திமுக கவுன்சிலரான விமலா மற்றும் அவரது கணவரான திமுக வட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமறைவாகினர். பின்னர் இருவரும் இந்த வழக்கில் கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிக்க சென்னை உயர் நீதிமன்றத்தை நாடி முன்ஜாமின் பெற்றனர்.
இந்த நிலையில் இன்று இருவரும் முன் ஜாமீன் பெற்ற ஆவணங்களை சமர்பிக்க எழும்பூர் நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர். அப்போது முன் ஜாமீன் வழங்கிய ஆர்டரை மேஜிஸ்ட்ரேட் சரிபார்த்தபோது, முன் ஜாமீன் காலாவதியானதும் அந்த ஆர்டரை போல தேதி மாற்றி போலியாக ஒரு ஆர்டரை தயார் செய்து கொடுத்ததும் மேஜிஸ்ட்ரேட்டுக்கு தெரிய வந்தது.
இதையும் படிக்க : போதும் நிறுத்துங்கள்.. மேயர் பிரியாவின் விழிப்புணர்வு பிரச்சாரம் !
இதனையடுத்து மேஜிஸ்ட்ரேட் உத்தரவின் படி திமுக 124 வது வார்டு கவுன்சிலரான விமலா மற்றும் அவரது கணவரான திமுக வட்ட செயலாளருமான கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரையும் கைது செய்ய சொல்லி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து எழும்பூர் போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
எழும்பூர் போலீசார் விசாரணையில் திமுக வட்ட செயலாளரான கிருஷ்ணமூர்த்தியின் சகோதரியான நாகலட்சுமி என்பவருக்கு சொந்தமாக சோழிங்கநல்லூரில் இருந்த இடத்தை திமுக வட்ட செயலாளரான கிருஷ்ணமூர்த்தி போலி ஆவணங்கள் மூலம் அபதரித்ததும் அதன் பேரில் தாம்பரம் காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் இவர் மீது வழக்கு பதிவு நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள திமுக நிர்வாகிகள் தம்பதிகளான விமலா - கிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடம் எழும்பூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காலாவதியான முன் ஜாமீன் ஆவணங்களை போலியாக உருவாக்கி அதனை நீதிமன்றத்தில் மேஜிஸ்ட்ரேட்டிடமே கொடுத்த திமுக கவுன்சிலர் விமலா மற்றும் அவரது கணவரான திமுக வட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவமானது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கிருஷ்ணமூர்த்தியை அடிப்படை உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Bail petition, Chennai, Crime News, DMK