PREVNEXT
முகப்பு / செய்தி / சென்னை / மாமல்லபுரம் முதலைகள் இடமாற்றத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி... சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...

மாமல்லபுரம் முதலைகள் இடமாற்றத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி... சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...

Mamallapuram | மாமல்லபுரம் முதலை பண்ணையில் இருக்கும் 1000 முதலைகளை குஜராத்திற்கு இடமாற்றம் செய்வதை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை முதலைப் பண்ணை

சென்னை முதலைப் பண்ணை

மாமல்லபுரத்தில் இயங்கி வரும் முதலை பண்ணையில் கூடுதலாக இருக்கும் ஆயிரம் முதலைகளை குஜராத் மாநிலம் ஜாம் நகர் மாவட்டத்தில் உள்ள விலங்கியல் மறுவாழ்வு மையத்திற்கு இடமாற்றம் செய்ய மத்திய மாநில அரசு துறைகள் அனுமதியளித்தது. இதனை எதிர்த்து சென்னை சிந்தாதிரிபேட்டையை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஏ. விஸ்வநாதன்  என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், 56 முதலைகளை மட்டுமே வைக்கக்கூடிய 7300 சதுர மீட்டர் இடத்தில் 1000 முதலைகள் அடைக்கப்போவதாகவும், இடமாற்றம் செய்ய அனுமதியளித்தது சட்டவிரோதம் என அறிவித்து, அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.

மேலும், இந்த பூங்காவுக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக சி.பி.ஐ. அல்லது சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்.

உங்கள் நகரத்திலிருந்து (சென்னை)

திருட சென்ற இடத்தில் வசமாக சிக்கிய திருடன்... சினிமா பாணியில் தப்ப முயன்றபோது நேர்ந்த சோகம்!

ரயில் பயணிகள் கவனத்திற்கு... சென்னை கடற்கரை - சேப்பாக்கம் இடையே ரயில் சேவை ரத்து...!

ஆட்டோவில் பயணிக்க ஒருநாள் முழுவதும் இலவசம்... சிஎஸ்கே வெற்றியை கொண்டாடும் தீவிர தோனி ரசிகர்!

செங்கோலில் உள்ள நந்தி அனைத்து மதத்திற்கும் பொதுவான தர்ம தேவதை... தருமபுரம் ஆதினம் விளக்கம்!

ஒரு நாளைக்கு 5 பெண்கள் டார்கெட்.. டீ சர்ட் பெண்கள் மீது மோகம்.. ‘மன்மதன்’-க்கு மாவுகட்டு போட்ட சென்னை போலீஸ்..!

பேருந்து ஸ்டிரைக் விவகாரம்: பொது மக்களிடம் கூடுதல் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது- சென்னை மாநகர காவல்

சென்னையில் நெரிசல் குறைகிறது..? வேளச்சேரி - ஆலந்தூர் பறக்கும் ரயில் திட்டம் பற்றி முக்கிய அப்டேட்..!

துப்பட்டா அணியாத பெண்களே டார்க்கெட்... சென்னையில் பகீர் சம்பவம்

சென்னை மக்களே உஷார்... நாளை குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

ஆதரவற்ற மூதாட்டியிடம் வழிப்பறி செய்த ஆட்டோ ஓட்டுநர் அதிரடி கைது...!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்காபூர்வாலா பதவியேற்பு

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய அமர்வு, குஜராத்தில் உள்ள விலங்குகள் மறுவாழ்வு மையத்தில் ஆயிரம் முதலைகளை பராமரிக்க போதுமான இட வசதிகள் உள்ளது என்பது மறுவாழ்வு மையம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட புகைப்பட ஆதாரங்களில் இருந்து தெளிவாக தெரிவதால் மனுதாரர் கோரிக்கையை ஏற்க முடியாது என உத்தரவிட்டனர்.

Also see... பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் முக்கிய கோரிக்கை

top videos
  • வெயிலில் பணிபுரியும் காவலர்களுக்கு மோர் வழங்கிய மாற்றுத்திறனாளி..! புதுவையில் நெகிழ்ச்சி..!
  • குறைந்த விலையில் புத்தக பைகள் வாங்க செம்ம ஸ்பாட்..! கோவையில் இங்க போங்க..!
  • இனிமையான குரலில் பாட்டுப்பாடி அசத்தும் மாற்றுத்திறனாளி..! விருதுநகர் சாலையோரத்தில் ஒலிக்கும் இசை..!
  • “கம்போடியா வரை காஞ்சி” - ஆசிய பண்பாட்டு ஆராய்ச்சி மையம் நடத்தும் புகைப்படக் கண்காட்சி!
  • இனி பேருந்து, லாரி இயற்கை எரிவாயு மூலம் இயங்கும்..! காஞ்சியில் புதிய தொழில் நுட்பம் அறிமுகம்..!
  • மேலும், முதலைகள் இடமாற்றம் செய்ய சட்டப்படி முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், நிபுணர்களும் அந்த மையத்தில் உள்ள வசதிகள் குறித்து திருப்தி தெரிவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

    Tags:Chennai High court, Crocodile, HC, Mamallapuram

    முக்கிய செய்திகள்