தமிழக டிஜிபி சைலேந்திரபாபு செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது காவல் நிலையத்தை முறையாக பராமறித்து வைத்திருந்த எழுத்தர்க்கு ரூபாய் 5000 வெகுமதி வழங்கி பாராட்டினார்.
சென்னை செம்மஞ்சேரி காவல் நிலையத்தை தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தீடீர் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னையில் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள் - காவல்துறை எச்சரிக்கை
மெரினா போறீங்களா... இன்று முதல் சென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்!
பள்ளிகள் திறப்பு... 3 மடங்கு வரை உயர்ந்த விமான கட்டணம்.. பயணிகள் அதிருப்தி
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்காபூர்வாலா பதவியேற்பு
செங்கோலில் உள்ள நந்தி அனைத்து மதத்திற்கும் பொதுவான தர்ம தேவதை... தருமபுரம் ஆதினம் விளக்கம்!
பொய் கேஸ் கொடுத்துவிட்டு Just Fun என கூலாக கூறிய ஜெர்மன் இளைஞர்... இரண்டு நாட்கள் அலைந்து திரிந்து வெறுத்த போலீசார்...
சென்னை ஏஜிஎஸ் திரையரங்கில் ரூ.2000 நோட்டு வாங்க மறுத்ததால் வாக்குவாதம்
சென்னை திரையரங்கில் 2000 ரூபாய் நோட்டை வாங்க மறுப்பு...
துப்பட்டா அணியாத பெண்களே டார்க்கெட்... சென்னையில் பகீர் சம்பவம்
சைடிஷ்-க்காக நண்பனை கொலை செய்த இளைஞர்... மது போதையில் அரங்கேறிய கொடூரம்...!
பள்ளிகளின் உட்கட்டமைப்பில் கவனம் செலுத்தும் சென்னை மாநகராட்சி - மேயர் பிரியா ஆய்வு..
ஆய்வு மேற்கொண்ட டிஜிபி காவல் நிலையத்தில் உள்ள சரித்திர பதிவேடுகள், குற்றச்சம்மந்த பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் சமீபத்தில் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் என்னமாதிரியான குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளீர்கள் என்றெல்லாம் காவல் ஆய்வாளர் நடராஜன் மற்றும் எழுத்தர் ராஜாமணியிடம் விசாரித்தார். பின்னர் காவல் நிலையத்தில் உள்ள உதவி ஆய்வாளர்கள், காவலர்களிடம் நிறை குறைகளை கேட்டறிந்து உடல்நலம் குறித்தும் விசாரித்தார்.
இறுதியில் காவல் நிலையத்தில் பதிவேடு அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டு இருந்ததால் காவல் நிலைய எழுத்தர் ராஜாமணிக்கு ரூபாய் 5000 வெகுமதி வழங்கினார். பின்னர் அனைவருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார். உடன் பள்ளிக்கரணை துணை ஆணையர் ஜோஷ் தங்கையா, செம்மஞ்சேரி சரக உதவி ஆணையாளர் ரியாசுதீன் இருந்தனர்.
செய்தியாளர்: வினோத்குமார்- ஈசிஆர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Police station, Sylendra Babu