PREVNEXT
ஹோம் / நியூஸ் / சென்னை /

அதிக மணல் ஏற்றி சென்றதாக இதுவரை எத்தனை லாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? - தமிழக அரசிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

அதிக மணல் ஏற்றி சென்றதாக இதுவரை எத்தனை லாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? - தமிழக அரசிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

மணல் லாரி

மணல் லாரி

அதிக அளவில் மணலை ஏற்றி செல்ல நிர்பந்திக்கும் குவாரி உரிமையாளர்கள் மற்றும் அதை கண்டுகொள்ளாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை

தமிழ்நாட்டில் அளவுக்கு அதிகமாக மணல் ஏற்றி சென்றதாக இதுவரை எத்தனை லாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் அதன் தலைவர் செல்ல ராஜாமணி தாக்கல் செய்த மனுவில், கட்டுமான பொருட்களான மணல் மற்றும் கற்களை அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக ஏற்றி செல்லும்படி குவாரி உரிமையாளர்கள், லாரி டிரைவர்களை நிர்பந்திப்பதாகவும், அதன் காரணமாக லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் வழக்குகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அதிக அளவில் மணலை ஏற்றி செல்ல நிர்பந்திக்கும் குவாரி உரிமையாளர்கள் மற்றும் அதை கண்டுகொள்ளாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் இது தொடர்பாக அரசிற்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட இல்லை எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் நகரத்திலிருந்து (சென்னை)

மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் உயர்வு - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கொரோனாவுக்கு பலியான அரசு மருத்துவரின் மனைவிக்கு கருணை அடிப்படையில் பணி... தமிழக அரசு பரீசிலிக்க உத்தரவு

40 வெடிகுண்டுகள்... 36 பட்டாகத்திகள்... பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த ரவுடியை சுற்றிவளைத்து கைது செய்த போலீசார்

'பூங்கா.. பஸ்.. இனி மாற்றுத்திறனாளிகளுக்கு பொது இடங்கள் உகந்தவையாக இருக்கும்' - உறுதி அளித்த உதயநிதி

பெற்ற குழந்தைக்கு பால் தர முடியாததால் மன உளைச்சலில் தாய் தற்கொலை : சென்னையில் சோகம்!

போதும் நிறுத்துங்கள்... பாலியல் அத்துமீறலுக்கு எதிராக மேயர் பிரியாவின் விழிப்புணர்வு பிரச்சாரம் !

பச்சை நிற ஆவின் பால் பாக்கெட்களுக்கு தட்டுப்பாடு - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

நில அபகரிப்பு வழக்கு.. போலி ஆவணங்களைச் சமர்பித்த திமுக கவுன்சிலர் கைது

திமுகவில் இருந்து மாநகராட்சி கவுன்சிலரின் கணவர் சஸ்பெண்ட்

சென்னையில் மாமூல் கேட்டு சலூன் கடை ஊழியர்களை தாக்கிய இளைஞர் - மேயர் பெயரை சொல்லி மிரட்டல்

”அப்படியா! நல்லா இருக்கே” இபிஎஸ் பேச்சுக்கு உதயநிதியின் கலகல பதில்

இதையும் வாசிக்க: முதல்வரை அவதூறாக சித்தரித்து சுவரொட்டி ஒட்டிய விவகாரம் - நீதிமன்றத்தில் காவல்துறை முக்கிய தகவல்!

அதிக அளவில் மணல் மற்றும் கற்களை ஏற்றி செல்வதை கட்டுப்படுத்த விதிகளை வகுக்க வேண்டும் என்றும் அதிக அளவில் மணல் மற்றும் கற்களை ஏற்றி செல்வதை தடுக்காத அதிகாரிகள் மற்றும் காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி அதிகேசவலு அமர்வு, தமிழ்நாட்டில் அதிக அளவில் மணல் மற்றும் கற்கள் ஏற்றி சென்றதாக எத்தனை லாரிகள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்களை தாக்கல் செய்யும்படி, தமிழ்நாடு அரசிற்கும், மனுதாரர் தரப்பிற்கும் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

Tags:Chennai High court, Lorry owner association, Sand, Tamilnadu

சிறந்த கதைகள்