PREVNEXT
முகப்பு / செய்தி / வணிகம் / ஆயிரகணக்கில் அதிரடியாக பணி நீக்கம்; ஊழியர்களுக்காக இந்திய சட்டம் சொல்வது என்ன?

ஆயிரகணக்கில் அதிரடியாக பணி நீக்கம்; ஊழியர்களுக்காக இந்திய சட்டம் சொல்வது என்ன?

Indian Law | முன்னறிவிப்பின்றி ஒட்டுமொத்தமாக பணிநீக்கம் செய்யப்படும் போது, ஊழியர்கள் உடனடியாக அதை எதிர்கொள்ள முடியாத சூழலில், இந்திய சட்டம் என்ன சொல்கிறது என்பதை இங்கே பார்க்கலாம்.

மாதிரி படம்

மாதிரி படம்

இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலுமே ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தொழில்நுட்ப நிறுவனங்களால் பணி நீக்கம் செய்யப்பட்டு வருவது தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பொருளாதார வீழ்ச்சி, பணவீக்கம் என்பது உலகம் முழுவதையும் பாதித்து இருக்கிறது ஒரு பக்கம் இருந்தாலும், தொடர்ச்சியாக தொழில்நுட்ப நிறுவனங்கள் இவ்வாறு ஆயிரக்கணக்கில் ஒரே நேரத்தில் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குவது என்பதை அவ்வளவு சாதாரணமாக எதிர்கொள்ள முடியவில்லை. இதற்கு இந்திய ஊழியர்களும் விதிவிலக்கல்ல. ஒவ்வொரு நாட்டின் சட்டப்படி, ஊழியர்களை பணியில் இருந்து நீக்கும் போது, அதற்கான கூடுதல் ஊதியம் அறிவிப்பு காலம் என்பதை நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும். கணிசமான இந்தியர்கள் இந்த அதிரடி பணி நீக்கத்தில் பாதிக்கப்பட்டு இருப்பதால், இந்திய சட்டம் தொகுப்பூதியம் மற்றும் அறிவுப்பு காலம் பற்றி என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.

எலான் மஸ்க் ட்விட்டரின் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டவுடன் கிட்டத்தட்ட டிவிட்டரில் பணியாற்றி வந்த 50% க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்திருக்கிறார். அதேபோல, மெட்டா நிறுவனமும் 11,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. அதைத் தொடர்ந்து அமேசான் நிறுவனமும் தற்போது 10,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியாவின் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான பைஜூஸ் நிறுவனமும், 2500 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. மேலும் பல நிறுவனங்களில் இதை எதிர்பார்க்கலாம் என்ற சூழல் தான் நிலவுகிறது.

இந்த நிறுவனங்கள் எல்லாவற்றிலும் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். திடீரென்று ஒருவருக்கு வேலை போவது என்பது கடுமையான சூழலை உண்டாக்கும். பணியில் இருக்கும் ஒரு நபர் வேலையிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டுமென்றால் அதற்கு 30 நாட்கள், 60 நாட்கள் என்று முன்பே அறிவிப்பு கொடுக்க வேண்டும், என்பது ஒவ்வொரு நிறுவனத்தின் விதிகளில் உள்ளன. அதே போல ஒரு நபரை வேலையிலிருந்து நீக்குவதற்கு குறிப்பிட்ட நாட்களுக்கு முன்பே அறிவிப்பை மேற்கொள்ள வேண்டும் என்ற சட்டமும் இருக்கிறது. இந்நிலையில் முன்னறிவிப்பின்றி ஒட்டுமொத்தமாக இவ்வாறு பணிநீக்கம் செய்யப்படும் போது, ஊழியர்கள் உடனடியாக அதை எதிர்கொள்ள முடியாத சூழலில், சட்டம் என்ன சொல்கிறது?

டிவிட்டர் நிறுவனத்தைப் பொறுத்தவரை பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மூன்று மாத சம்பளம் வழங்கப்பட்டது என்று எலான் மஸ்க் தெரிவித்திருக்கிறார். இது சட்டப்பூர்வமாக வழங்கப்படும் தொகையை விட 50% அதிகம் என்று கூறியிருக்கிறார். ஆனால் எல்லா ஊழியர்களுக்கும் இதே அளவு தொகை வழங்கப்படவில்லை! இந்திய ஊழியர்களுக்கு இரண்டு மாத சம்பளம் மட்டும் தான் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

டிவிட்டரில் பணியாற்றிய வேலைநீக்கம் செய்யப்பட்ட ஐந்து அமெரிக்க முன்னாள் ஊழியர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு இரண்டு மாதத்துக்கான தொகுப்பூதியம், போனஸ் தொகை, டிவிட்டரில் இவர்கள் வைத்திருக்கும் ஈக்விட்டிக்கு சமமான ரொக்கம் மற்றும் உடல்நல காப்பீடு ஆகியவை வழங்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்டது, ஆனால் எதுவும் வழங்கப்படவில்லை என்று தெரிவித்திருக்கின்றனர்.

Also Read : ’எனக்கு யாராவது வேலை கொடுங்க...’ - உருக்கமான கோரிக்கை வைத்த அமெரிக்க வாழ் இந்தியர்.!

377

மெட்டா நிறுவனத்தை பொறுத்தவரை இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நேரத்தில் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சியை இன்னும் நம்ப முடியவில்லை! மெட்டா ஊழியர்களுக்கு 16 வாரத்திற்கான சம்பளம் மற்றும் எத்தனை ஆண்டுகள் மெட்டாவில் பணியாற்றி இருக்கிறார்களோ, அந்த கணக்கீட்டின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டுக்கும் இரண்டு வாரத்திற்கான சம்பளம் என்ற தொகையும் சேர்த்து வழங்குவதாக மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்திருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் கட்டுப்படுத்தப்பட்ட ஸ்டாக் யூனிட்களின் உரிமையாளர்களுக்கும் மெட்டா ஊதியம் வழங்கும் என்றும் மார்க் உறுதி அளித்திருக்கிறார். பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மற்றும் அவர்களை சார்ந்து இருப்பவர்களுக்கும் ஆறு மாதத்துக்கான ஹெல்த் இன்ஷூரன்ஸ் கவரேஜ், மூன்று மாதத்திற்கான கேரியர் சப்போர்ட்டும் வழங்கப்படும் என்று கூறியிருக்கிறார்.

இந்தியாவில் பணி நீக்க தொகுப்பூதியம் பற்றி இந்திய சட்டம் என்ன சொல்கிறது?

தொழிலாளர் சட்டத்தின்படி ஊழியர்கள் என்பவர்களை, நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள் மற்றும் நிர்வாகப் பொறுப்பில் இல்லாதவர்கள் என்று இரண்டு விதமாகப் பிரிக்கிறது. எந்த விதமான நிர்வாகப் பொறுப்பும் இல்லாத பணியாளர்களாக, தனிப்பட்ட பங்களிப்பாளர்களாகப் பார்க்கிறது. அதே போல, நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் நோட்டீஸ் பீரியட் தவிர்த்த, பணி நீக்க ஊதியம், மற்றும் அதற்கு பிறகு வழங்கப்படும் நன்மைகள் எல்லாமே ஒப்பந்தத்தில் இருப்பதைப் போல பொருந்தும். நிர்வாகப் பொறுப்பில் இல்லாத ஊழியர்களுக்கு, அவர்கள் ஒரு வருடம் பணி நிறைவு செய்திருந்தால், பணியில் இருந்த ஒவ்வொரு ஆண்டுக்கும் 15 நாட்கள் சம்பளம் என்ற வீதத்தில் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இது அறிவிப்பு ஊதியம், கிராஜுவிட்டி உள்ளிட்ட நன்மைகளையும் அடக்கியுள்ளது.

Also Read : அரசு ஊழியர்களுக்கான எச்சரிக்கை; அடிக்கடி இந்த விஷயத்தை செய்தால் இனி இது தான் நடக்குமாம்!

சட்டத்தின் படி, ஊழியர்கள் என்ற விதிமுறைகளின் கீழ் வரும் பணியாளர்கள் அனைவருமே, தங்களுக்கு போதிய இழப்பீடு வழங்கவில்லை என்னும் போது, தங்களது அதிகார வரம்புக்கு உட்பட்ட தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தை அணுகி புகார் அளிக்கலாம். அதிலும் தீர்வு காண முடியவில்லை என்றால், தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்படும்.

மேலாளர்களைப் பொறுத்தவரை, ஒப்பந்தத்தில் இருப்பது போல இழப்பீடும் பணி நீக்க தொகுப்பூதியமும் வழங்கப்படவில்லை என்றால், அவர்கள் சிவில் நீதிமன்றத்தை தான் அணுக வேண்டும். அதே போல, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு (EPF) அறிவிப்பு கால ஊதியம் அல்லது ஆட்குறைப்புக்கான இழப்பீடு ஆகியவை பொருந்தாது.

Tags:India, Law, Tamil News

முக்கிய செய்திகள்