PREVNEXT
முகப்பு / செய்தி / வணிகம் / உடனடி தனிநபர் கடன்களைப் பயன்படுத்த 5 ஸ்மார்ட் வழிகள்

உடனடி தனிநபர் கடன்களைப் பயன்படுத்த 5 ஸ்மார்ட் வழிகள்

அந்த முதலீடு இன்றைய தேவைக்கு மட்டும் அல்லாது நீண்ட காலத்திற்கு உங்களுக்கு பயனளிக்கும் விதத்தில் இருக்க வேண்டும்..

தனிநபர் கடன்

தனிநபர் கடன்

இன்றைய காலத்தில் கடன் இல்லாத ஆள் யார் இருக்கிறார்கள் என்று விறல் விட்டு எண்ணிவிடலாம். வீடு, கார், வண்டி, வீடு பொருட்கள் உட்பட எல்லாமே கடனில் தான் ஓடிக்கொண்டு இருக்கிறது. அதற்காகவே பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் உடனடி தனிநபர் கடன் எனும் வசதியை அறிமுகமம் செய்துள்ளது.

எதிர்பாராத செலவுகள் வந்துவிட்டால் அல்லது சில அவசர தேவைகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும் போது உடனடி தனிநபர் கடன்களை விண்ணப்பித்தல் எளிதாக பணம் கைக்கு வரும். மேலும் மக்கள் இந்த திட்டத்தை உடனடி நிதியைப் பெற அடிக்கடி பயன்படுத்துகின்றனர்.

அதற்காகவே இந்த கடன்களுக்கு  குறைந்தபட்ச ஆவணங்கள் மட்டுமே கேட்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் இந்த பிரிவில் கேட்கப்படும் கடன்களுக்கு குறைந்த  செயலாக்க நேரத்துடன் உடனடியாக பணத்தை வழங்குகின்றன. உடனடி கடன்களைப் பெறுவது எளிதாக இருக்கும் போது,அதை நீங்கள் புத்திசாலித்தனமாக  முதலீடு செய்ய வேண்டும்தானே?

அந்த முதலீடு இன்றைய தேவைக்கு மட்டும் அல்லாது நீண்ட காலத்திற்கு உங்களுக்கு பயனளிக்கும் விதத்தில் இருக்க வேண்டும்.. உடனடி தனிநபர் கடன்களை நீங்கள் சிறப்பாகப் பயன்படுத்துவதற்கான ஐந்து வழிகள் இங்கே:

மருத்துவ செலவுகள்

உடனடி தனிநபர் கடன்கள் பொதுவாக ஒப்புதல் பெற்ற சில நிமிடங்களில் வழங்கப்படுகின்றன. எனவே, உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கோ அவசர மருத்துவச் சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில், எந்தவொரு மருத்துவச் செலவையும் சந்திக்க நீங்கள் இந்த கடனுக்கு விண்ணப்பித்து பணத்தைப் பயன்படுத்தலாம். அநேரத்தில் பணத்தை புரட்டும் டென்சன் இருக்காது.

377

உயர் கல்வி

வேலை செய்பவராகவே அல்லது படித்துவிட்டு மேலே படிக்க ஆர்வமாக இருப்பவராக இருந்தால் பணம் தேவை படும். வங்கியில் போதுமான பணம் இல்லை ஆனால் கல்விக்கடன் விண்ணப்பித்து கிடைக்க வெகுநாள் ஆகும் என்று நீங்கள் யோசித்தால் உடனடி தனிநபர் கடனை நீங்கள் எடுக்கலாம். இந்த கடன் தொகை அதிக ஊதியம் பெறும் வேலைகளுக்கு உங்களைத் தகுதியடையச் செய்து, மேலும் சம்பாதிக்க உதவும்.

உங்கள் திருமணத்திற்கு நிதியளிக்கவும்

இன்றைய தேதியில் மற்ற செலவுகளை விட திருமணத்திற்கு ஆகும் செலவு தான் பெரிய தொகையாக இருக்கிறது. கல்யாணம் பண்ணி பார் என்று சொன்னதெல்லாம் அப்போது தான் கல்வெட்டு எழுத்தால் நம் கண்முன் ஓடும். நல்ல ஒரு  இந்திய திருமணம் செய்ய விரும்பினால் அது உங்கள் வங்கிக் கணக்கை தீர்ந்துவிடும். திருமண ஆடைகள் மற்றும் அலங்காரங்கள் முதல் கேட்டரிங் வரை பல செலவுகள் உள்ளன. இந்தச் செலவுகளில் ஏதேனும் ஒன்றைச் சந்திக்க உங்களிடம் பணம் இல்லை என்றால், உடனடி தனிநபர் கடன் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இதையும் பாருங்க : உங்கள் போஸ்ட் ஆபீஸ் கணக்கு பேலன்ஸ் செக் செய்ய 7 எளிமையான வழிகள்..!

கடனில் இருந்து விடுபடுங்கள்

கடன் ஒருங்கிணைப்பு என்பது நீங்கள் உடனடி தனிநபர் கடனைப் பயன்படுத்துவதற்கான மற்றொரு சிறந்த வழியாகும். ஏற்கனவே உள்ள மற்ற கடன்களை அடைப்பதற்காக நீங்கள் புதிய கடனை எடுக்கும் முறை இது. தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் பெரும்பாலும் குறைவாக இருக்கும். இதனால் அதிக வட்டி உள்ள மற்ற கடனை இந்த தனிநபர்  கடனை வைத்து கட்டிவிட்டு,  மீதம் உள்ள இந்த கடனை மட்டும் குறைந்த வட்டியுடன் செலுத்திக்கொள்ளலாம். வட்டி பணம் மிச்சம் தானே.

உங்கள் வீட்டைப் புதுப்பிக்கவும்

எல்லோரும் தங்கள் வீடு அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் வீட்டை புதுப்பித்தல் மற்றும் வீட்டு உபகரணங்களை மேம்படுத்துவதற்கான செலவு பெரும்பாலும் அதிகமாக இருக்கும். உங்கள் வீட்டிற்கு நவீன தோற்றத்தைக் கொடுக்க அல்லது சில  பழுதுபார்க்கும் வேலைகளைச் செய்ய விரும்பினால், உடனடி தனிநபர் கடன் உங்களுக்குத் தேவையான பணத்தை வழங்கும்.

Tags:Loan, Personal Finance, Personal Loan

முக்கிய செய்திகள்