PREVNEXT
முகப்பு / செய்தி / அரியலூர் / 21 பைக்.. ரூ.6 லட்சம் மதிப்பு.. ஜெயங்கொண்டத்தில் சிக்கிய பலே திருடன்

21 பைக்.. ரூ.6 லட்சம் மதிப்பு.. ஜெயங்கொண்டத்தில் சிக்கிய பலே திருடன்

திருவண்ணாமலை, விழுப்புரம், புதுக்கோட்டை நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், தஞ்சாவூர், பாண்டிச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் இவர் இருசக்கர வாகனங்களை திருடியுள்ளார்.

கைதான ராஜ்குமார்

கைதான ராஜ்குமார்

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா சோமசுந்தரம் ஆலோசனைக்கிணங்க ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளில் வழிப்பறி வழக்கில் குற்றவாளியை கைது செய்ய தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த புதன்கிழமை அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த நபரை மறித்து விசாரணை செய்ததில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

சந்தேகத்தின் பேரில்  விசாரணை செய்ததில் அவர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மேலமருதூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பது தெரியவந்தது. மேலும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தொடர்ந்து நடத்திய தீவிர விசாரணையில், அவர்  திருவண்ணாமலை, விழுப்புரம், புதுக்கோட்டை நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், தஞ்சாவூர், பாண்டிச்சேரி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் ஜெயங்கொண்டம் பகுதியிலும் இருசக்கர வாகனத்தை திருடியதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்.

உங்கள் நகரத்திலிருந்து (அரியலூர்)

நகை, பணத்துக்காக முதியவர் அடித்துக் கொலை.. அரியலூரில் மர்ம நபர்கள் வெறிச்செயல்..

வேறோரு பெண்ணுடன் நிச்சயம்... விபத்தை ஏற்படுத்தி காதலியை கொன்ற காதலன்... அரியலூரில் அதிர்ச்சி..!

21 பைக்.. ரூ.6 லட்சம் மதிப்பு.. ஜெயங்கொண்டத்தில் சிக்கிய பலே திருடன்

உரிமம் இல்லாமல் நாட்டு துப்பாக்கி வைத்து பறவைகளை வேட்டையாடிய 3 பேர் அரியலூரில் கைது

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண் பாலியல் வன்கொடுமை... அரியலூர் இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை!

பஸ் ஓட்டிக்கொண்டே செல்போனுக்கு சார்ஜ்: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 52 பேர் காயம்

10 ஆம் வகுப்பு மாணவி 8 மாதம் கர்ப்பம் : 9 ஆம் வகுப்பு மாணவன் போக்சோவில் கைது!

அரியலூர் மக்களை விடிய விடிய தூங்க விடாத முதலை.. பகீர் சம்பவம்!

நடுரோட்டில் லாரியை நிறுத்தி மது அருந்தும் ஓட்டுநர்கள்...அதிகரிக்கும் விபத்துகள்...நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஸ்ரீபுரந்தான் பெரியநாயகி சமேத உடனுறை பிரகதீஸ்வரர் கோவில் ஆருத்ரா தரிசனம்..!

பெட்ரோல் திருட்டு.. இளைஞரை மரத்தில் கட்டிவைத்து அடித்த கொடூரம் - அரியலூரில் அரங்கேறிய கொடுமை

top videos
  • புதுகை ஸ்ரீவெங்கடாஜலபதி கோவில் கும்பாபிஷேக விழா.. முளைப்பாரி எடுத்த பெண்கள்..
  • அதென்ன பாதிரி மாம்பழம்..? மயிலாடுதுறையில் ஃபேமஸாகும் புது மாம்பழ வகை..!
  • புதுவை கௌசிக பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக உற்சவம்!
  • திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா..! பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!
  • விராலிமலை முருகன் கோயில் வைகாசி தேரோட்டம்.. திரளான பக்தர்கள் தரிசனம்..
  • இதனையடுத்து அவரிடமிருந்து ரூபாய் 6 லட்சம் மதிப்பிலான 21 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ராஜ்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வெளிமாவட்டத்தைச் சேர்ந்த ஒரே நபர் 21 இரண்டு சக்கர வாகனங்களை திருடிய சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Tags:Ariyalur, Bike Theft, Crime News, Local News, Theft, Thief

    முக்கிய செய்திகள்