2022-23-ஆம் ஆண்டிற்கான கால்நடை பராமரிப்புதி பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மானியக் கோரிக்கையின் போது தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் "கிராமப்புறங்களில் சிறிய அளவிலான 250 கோழிகள் / அலகு) 100 நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் நிறுவ 50% மானியம் வழங்கும் திட்டம்" செயல்படுத்திட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் நாட்டுக் கோழிகள் வளர்ப்பதில் ஆர்வமும் திறனும் கொண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு சிறிய அளவிலான (250 கோழிகள் அலகு) நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் நிறுவ 50% மானியம் வழங்கி, திட்டத்தினை செயல்படுத்திட தேவையான கோழி கொட்டகை கட்டுமானச் செலவு. உபகரணங்கள் வாங்கும் செலவு (தீவனத்தட்டு மற்றும் தண்ணீர் வைக்கும் தட்டு, குஞ்சுபொறிப்பான்), 4 வார குஞ்சுகள் வாங்கும் செலவு மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு (கோழி வளரும் வரை) ஆகியவற்றிற்கான மொத்த செலவில் 50 சதவீதம் மானியமாக ரூ.1.66,875/- வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் கிராமப்புற பயனாளிகள். இத்திட்டத்தின் மீதமுள்ள 50 சதவீதம் பங்களிப்பை வங்கிக் கடன் மூலமாகவோ அல்லது தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ திரட்ட வேண்டும். நாட்டுக்கோழி இறைச்சி மற்றும் முட்டைகளுக்கு தமிழகம் முழுவதும் நல்ல சந்தை இருப்பதால், பயனாளியே கோழி வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றை கவனித்துக்கொள்ள இயலும்.
நடுரோட்டில் லாரியை நிறுத்தி மது அருந்தும் ஓட்டுநர்கள்...அதிகரிக்கும் விபத்துகள்...நடவடிக்கை எடுக்கப்படுமா?
ஸ்ரீபுரந்தான் பெரியநாயகி சமேத உடனுறை பிரகதீஸ்வரர் கோவில் ஆருத்ரா தரிசனம்..!
முந்திரிக்காடு வீட்டில் சிறுமியை 10 நாட்கள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்: தாயும் உடந்தையாக இருந்தது அம்பலம்!
பஸ் ஓட்டிக்கொண்டே செல்போனுக்கு சார்ஜ்: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 52 பேர் காயம்
21 பைக்.. ரூ.6 லட்சம் மதிப்பு.. ஜெயங்கொண்டத்தில் சிக்கிய பலே திருடன்
உரிமம் இல்லாமல் நாட்டு துப்பாக்கி வைத்து பறவைகளை வேட்டையாடிய 3 பேர் அரியலூரில் கைது
நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடவில்லை.. ஆனால் கெடுக்கலாமா என சதி செய்கிறார்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நகை, பணத்துக்காக முதியவர் அடித்துக் கொலை.. அரியலூரில் மர்ம நபர்கள் வெறிச்செயல்..
திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண் பாலியல் வன்கொடுமை... அரியலூர் இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை!
பெட்ரோல் திருட்டு.. இளைஞரை மரத்தில் கட்டிவைத்து அடித்த கொடூரம் - அரியலூரில் அரங்கேறிய கொடுமை
10 ஆம் வகுப்பு மாணவி 8 மாதம் கர்ப்பம் : 9 ஆம் வகுப்பு மாணவன் போக்சோவில் கைது!
தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளில் 30 சதவிகிதம் தாழ்த்தப்பட்ட , பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இதற்கு முன்னர் அரசு வழங்கிய கோழி வளர்ப்புத் திட்டத்தில் பயனடைந்தவராக இருத்தல் கூடாது. மேலும், பயனாளி கோழிப்பண்ணையை தொடர்ந்து 3 வருடங்களுக்கு குறையாமல் பராமரிக்க உத்திரவாதக் கடிதம் அளிக்க வேண்டும். இத்திட்டத்தின் மூலம் நாட்டுக் கோழிகளை 72 வாரங்கள் வளர்த்து 140 முட்டைகள் வீதம் வருடத்திற்கு 17500 முட்டைகள் வரை உற்பத்தி செய்ய இயலும்.
இதில் சுமார் 2000 முட்டைகளை குஞ்சுபொறிப்பதற்கு பயன்படுத்திக்கொண்டு மீதம் உள்ள முட்டைகளையும் மற்றும் வளர்ந்த சேவல்களையும் இறைச்சிக்காக விற்பனை செய்வதன் மூலமாக ஒரு வருடத்திற்கு ரூ.2.00 இலட்சம் வரை வருமானம் ஈட்ட முடியும். எனவே, இத்திட்டத்தில் சேர விருப்பமுள்ள பயனாளிகள் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தகத்தை அணுகி விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஆவணங்களுடன் ஒப்படைத்திட 15.08.2022-க்குள் கால்நடை மருந்தகத்தில்சமர்ப்பிக்க வேண்டும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Ariyalur, Job Vacancy