அரியலூர் 10 ஆம் வகுப்பு மாணவியை 8 மாதம் கர்ப்பமாக்கிய 9 ஆம் வகுப்பு மாணவன் போக்சோவில் காவல்துறையினர் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து, பெற்றோர்கள் மாணவியை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மாணவியை பரிசோதித்த மருத்துவர் மாணவி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவி தெரிவித்துள்ளார். இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
பெட்ரோல் திருட்டு.. இளைஞரை மரத்தில் கட்டிவைத்து அடித்த கொடூரம் - அரியலூரில் அரங்கேறிய கொடுமை
பஸ் ஓட்டிக்கொண்டே செல்போனுக்கு சார்ஜ்: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 52 பேர் காயம்
நடுரோட்டில் லாரியை நிறுத்தி மது அருந்தும் ஓட்டுநர்கள்...அதிகரிக்கும் விபத்துகள்...நடவடிக்கை எடுக்கப்படுமா?
முந்திரிக்காடு வீட்டில் சிறுமியை 10 நாட்கள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்: தாயும் உடந்தையாக இருந்தது அம்பலம்!
திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண் பாலியல் வன்கொடுமை... அரியலூர் இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை!
10 ஆம் வகுப்பு மாணவி 8 மாதம் கர்ப்பம் : 9 ஆம் வகுப்பு மாணவன் போக்சோவில் கைது!
நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடவில்லை.. ஆனால் கெடுக்கலாமா என சதி செய்கிறார்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
உரிமம் இல்லாமல் நாட்டு துப்பாக்கி வைத்து பறவைகளை வேட்டையாடிய 3 பேர் அரியலூரில் கைது
ஸ்ரீபுரந்தான் பெரியநாயகி சமேத உடனுறை பிரகதீஸ்வரர் கோவில் ஆருத்ரா தரிசனம்..!
நகை, பணத்துக்காக முதியவர் அடித்துக் கொலை.. அரியலூரில் மர்ம நபர்கள் வெறிச்செயல்..
21 பைக்.. ரூ.6 லட்சம் மதிப்பு.. ஜெயங்கொண்டத்தில் சிக்கிய பலே திருடன்
அந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் மாணவனை கைது செய்து திருச்சி சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர். மேலும், மாணவி அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Crime News, POCSO case