PREVNEXT
முகப்பு / செய்தி / அரியலூர் / சிறுமியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த சாராய வியாபாரி - அரியலூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சிறுமியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த சாராய வியாபாரி - அரியலூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Ariyalur district News : அரியலூர் அருகே பள்ளி மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த கள்ளச்சாராய வியாபாரிக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

அரியலூர் மாவட்டம் நாச்சியார்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர். இவர் கள்ளச்சாராய வியாபாரம் செய்து வந்தவர் ஆவார். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு 11 ஆம் தேதி (11.08.2021)  அதே கிராமத்தைச் சேர்ந்த, தனது வீட்டின் அருகே வசிக்கும் 10ஆம் வகுப்பு மாணவியின் வீட்டில் அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளார்.

அங்கே வீட்டில் தனியாக இருந்த மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிச்சியடைந்த அந்த மாணவி, தனது தாய் வீட்டிற்கு வந்ததும் இது குறித்து அவரிடம் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உங்கள் நகரத்திலிருந்து (அரியலூர்)

ஸ்ரீபுரந்தான் பெரியநாயகி சமேத உடனுறை பிரகதீஸ்வரர் கோவில் ஆருத்ரா தரிசனம்..!

நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடவில்லை.. ஆனால் கெடுக்கலாமா என சதி செய்கிறார்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பஸ் ஓட்டிக்கொண்டே செல்போனுக்கு சார்ஜ்: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 52 பேர் காயம்

21 பைக்.. ரூ.6 லட்சம் மதிப்பு.. ஜெயங்கொண்டத்தில் சிக்கிய பலே திருடன்

நடுரோட்டில் லாரியை நிறுத்தி மது அருந்தும் ஓட்டுநர்கள்...அதிகரிக்கும் விபத்துகள்...நடவடிக்கை எடுக்கப்படுமா?

உரிமம் இல்லாமல் நாட்டு துப்பாக்கி வைத்து பறவைகளை வேட்டையாடிய 3 பேர் அரியலூரில் கைது

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண் பாலியல் வன்கொடுமை... அரியலூர் இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை!

நகை, பணத்துக்காக முதியவர் அடித்துக் கொலை.. அரியலூரில் மர்ம நபர்கள் வெறிச்செயல்..

பெட்ரோல் திருட்டு.. இளைஞரை மரத்தில் கட்டிவைத்து அடித்த கொடூரம் - அரியலூரில் அரங்கேறிய கொடுமை

10 ஆம் வகுப்பு மாணவி 8 மாதம் கர்ப்பம் : 9 ஆம் வகுப்பு மாணவன் போக்சோவில் கைது!

முந்திரிக்காடு வீட்டில் சிறுமியை 10 நாட்கள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்: தாயும் உடந்தையாக இருந்தது அம்பலம்!

இதைக் கேட்டு அதிச்சியடைந்த மாணவியின் தாய் 1098 பெண்கள் அவசர உதவி எண்ணிற்கு அழைத்து, புகார் தெரிவித்தார். இந்த புகாரின் அடிப்படையில் அரியலூர் மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து ராஜசேகரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Must Read : கன்னியாகுமரியில் காணாமல் போன 211செல்போன்கள்.. மேற்கு வங்கம் வரை சென்று மீட்ட சைபர் க்ரைம் போலீஸார்!

தண்டனை பெற்ற கள்ளச்சாராய வியாபாரி

இது குறித்த வழக்கு  அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இன்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன் குற்றவாளி ராஜசேகருக்கு, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்காக 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், ரூபாய் 30ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.

செய்தியாளர் - கலைவாணன்.

Tags:Ariyalur, Judgement, POCSO case, Sexual harassment

முக்கிய செய்திகள்