இந்தியாவின் கொரோனா தடுப்பு மருந்தின் பயணத்தை விவரிக்கும் விதமாக ஹிஸ்டரி டிவி18 தயாரித்த ‘தி வயல்’ (The Vial) என்ற ஒரு மணிநேர ஆவணப்படம் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது. கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்கப்பட்டதிலிருந்து மக்களுக்கு செலுத்தப்பட்டது வரையிலான நிகழ்வுகளை ஆவணப்படுத்தும் விதமாக இப்படம் அமைந்துள்ளது.
உலக அளவில் மிகப்பெரிய கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் திட்டமாக இந்தியாவின் கொரோனா தடுப்பு மருந்து வழங்கல் இருந்தது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல சவாலான சூழ்நிலைகளை கடந்து வெற்றிகரமாக இத்திட்டத்தை முடித்தது. கொரோனா பாதிப்பு நேரத்தின்போது உலகத்திற்கே தடுப்பூசிகளை வழங்கி இந்தியா அளப்பரிய உதவிகளை உலக நாடுகளுக்குச் செய்தது. பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கும் பலன் அளித்தன.
அந்த வகையில், கொரோனா தடுப்பு மருந்தின் பயணத்தை ஆவணப்படுத்தும் நோக்கில் ‘தி வயல்’ என்ற ஆவணப்படத்தை ஹிஸ்டரி டிவி18 சேனல் உருவாக்கியுள்ளது. இந்த ஆவணப்படத்தின் ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தி திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் மனோஜ் பாஜ்பாய் இந்த ஆவணப்படத்தில் கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு குறித்து விவரிக்கிறார். முதன் முறையாக பிரதமர் மோடியின் பேச்சை உள்ளடக்கியதாக இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்ட கால வரிசைப்படி இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. புனேயில் உள்ள தேசிய வைரலாஜி நிறுவனத்தில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டது முதல் கோடிக்கணக்கான வயல்கள் (மருந்து குப்பிகள்) உற்பத்தி செய்யப்பட்டது வரை அனைத்தும் இதில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து மனோஜ் பாஜ்பாய் கூறியதாவது, ‘இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் சிறப்பு சேர்க்கும் வகையில் இந்த ஆவணப்படத்தை ஹிஸ்டரி டிவி18 உருவாக்கியுள்ளது. இந்த ஆவணப்படத்தை எண்ணி ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டும். கொரோனா உச்சத்தில் இருந்தபோது முன் களத்தில் நின்று போராடிய மருத்துவ பணியாளர்கள், உயிர் நீத்தவர்களுக்கு இந்த ஆவணப்படம் சமர்ப்பணம். அவர்களும் மருத்துவ விஞ்ஞானிகளும் சவால்களை ஏற்றுக் கொண்டு தடுப்பூசிகளை கண்டுபிடித்ததால்தான் இன்றைக்கு நாம் அச்சமின்றி வீட்டை விட்டு வெளியே வருகிறோம்’ என்று தெரிவித்தார்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Corona Vaccine, Corona Warriors, CoronaVirus, Covid-19 vaccine, The Vial