PREVNEXT
முகப்பு / செய்தி / இந்தியா / “நான் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.பி”... ட்விட்டரில் Bio-வை மாற்றிய ராகுல் காந்தி..!

“நான் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.பி”... ட்விட்டரில் Bio-வை மாற்றிய ராகுல் காந்தி..!

வயநாடு தொகுதி எம்.பி பதவியில் இருந்து ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தனது ட்விட்டர் பயோவை மாற்றியுள்ளார்.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் ட்விட்டரில் பயோவில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.பி. என்று மாற்றிக் குறிப்பிட்டுள்ளார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.

2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடி குறித்து அவதூறாகப் பேசியதாக  தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து ராகுல் காந்தி வயநாடு தொகுதி எம்.பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்தது. இது ஜனநாயகப் படுகொலை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இதனை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். தகுதிநீக்கத்திற்காக தான் அஞ்சப்போவதில்லை என்று தெரிவித்த ராகுல்காந்தி, பிரதமர் மோடியின் கண்ணில் பயம் தெரிவதாகவும் குற்றம்சாட்டினார்.

Also Read : டெல்லியில் காங்கிரஸ் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு

இந்த நிலையில், ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் சுயவிவரங்கள் குறிப்பிடும் இடத்தில் (பயோ), காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் என்பதோடு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி என்றும் குறிப்பிட்டுள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் கவனிக்கத் தகுந்ததாக மாறியுள்ளது.

Tags:Congress, Rahul Gandhi, Twitter

முக்கிய செய்திகள்