PREVNEXT
முகப்பு / செய்தி / இந்தியா / வீடு கட்ட குவித்து வைக்கப்பட்டிருந்த ஆற்று மணலை சாப்பிட்ட பசுமாடு.. ஆச்சர்யத்துடன் பார்த்த பொதுமக்கள்!

வீடு கட்ட குவித்து வைக்கப்பட்டிருந்த ஆற்று மணலை சாப்பிட்ட பசுமாடு.. ஆச்சர்யத்துடன் பார்த்த பொதுமக்கள்!

Cow Eats Sand : திருப்பதியில் ஆற்று மணலை பசுமாடு ஒன்று சாப்பிட்டு கொண்டிருந்ததை பார்த்த பொதுமக்கள் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.

ஆற்று மணலை சாப்பிடும் பசுமாடு

ஆற்று மணலை சாப்பிடும் பசுமாடு

திருப்பதியில் உள்ள லட்சுமிபுரம் சர்க்கிள் பகுதியில் வீடு கட்டுவதற்காக குவித்து வைக்கப்பட்டிருந்த ஆற்று மணலை பசுமாடு ஒன்று சாப்பிட்டு கொண்டிருந்ததை பார்த்த பொதுமக்கள் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.

பசுக்கள் புல், வைக்கோல், பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் காகிதங்கள், சுவரொட்டிகள் ஆகியவற்றை சாப்பிடுவது வழக்கம். ஆனால் திருப்பதியில் பசு மாடு ஒன்று மணலை சாப்பிட்டுக் கொண்டிருந்தது. இதனை பார்த்த அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கலியுகத்தில் இதுவும் சகஜம் என்று பேசிக்கொண்டனர்.

இந்நிலையில், பசு மணலை சாப்பிடுமா? என்று சந்தேகம் ஏற்பட்டு நீண்ட காலமாக பசுக்களை வளர்த்து பராமரிக்கும் நபர்களிடம் கேட்டபோது, வயது முதிர்ந்த பசுக்கள் மணலை எப்போதாவது ஒருமுறை சாப்பிடும். பசுவின் உடலில் தாது சத்துக்கள் குறை ஏற்பட்டால் அது சரி செய்து கொள்வதற்காக அவை மணலை சாப்பிடும். பசுக்கள் தவிர ஒட்டகச்சிவிங்கி, மான் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு மிருகங்களும் உடலில் ஏற்படும் தாது சத்து குறைபாட்டை சரி செய்ய மணல் சாப்பிடுவது வழக்கம் என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க : அன்னவாசல் அருகே ஜல்லிக்கட்டு காளை உயிரிழப்பு.. சோகத்தில் மூழ்கிய கிராமம்..

மணலை சாப்பிடுவதன் மூலம் பசுக்களுக்கு பாஸ்பரஸ் மற்றும் உப்பு ஆகிய சத்துக்கள் கிடைக்கும்.மணலை சாப்பிடுவதன் மூலம் உடலில் ஏற்பட்டுள்ள தாது சத்து குறைபாட்டை சரி செய்து கொள்ளலாம் என்ற ஆலோசனை பசுக்களுக்கு எப்படி கிடைத்திருக்கும் என்ற கேள்விக்கு இயற்கையால் மட்டுமே பதில் சொல்ல முடியும்.

Tags:Animals, India, Local News

முக்கிய செய்திகள்