PREVNEXT
முகப்பு / செய்தி / இந்தியா / திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம்.. 3 குழந்தைகளின் தாயை கொன்ற டிரைவர்... டெல்லியில் பயங்கரம்..!

திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம்.. 3 குழந்தைகளின் தாயை கொன்ற டிரைவர்... டெல்லியில் பயங்கரம்..!

டெல்லியில் 30 வயது பெண்ணை கொலை செய்த டாக்ஸி ஓட்டுநரை காவல்துறை கைது செய்துள்ளது.

கைதான டிரைவர் சிவ் சங்கர்

கைதான டிரைவர் சிவ் சங்கர்

டெல்லியின் நியூ அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண் சுனிதா. திருமணமாகி மூன்று குழந்தைகளுக்கு தாயான இவர் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி மாயமானதாக கணவர் போலீசாரிடம் புகார் அளித்தார்.  இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய நிலையில், வீட்டிற்கு அருகே உள்ள பகுதியில் மர்மான முறையில் இறந்து கிடந்தார்.

காவல்துறை சுனிதாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தது. அதில்  அடித்து கொலை செய்யப்பட்டு உறுதியானது. இதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து காவல்துறை விசாரணையை தொடங்கினர். இறந்த பெண்ணின் கணவர், பெண்ணுடன் வேலை பார்க்கும் நபர்கள், அண்டை வீட்டார் ஆகியோரை விசாரித்ததுடன் சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தது.

விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் அம்பலமானது.  சில மாதங்களுக்கு முன்னர் பெண்ணின் கணவர் செல்போனுக்கு மர்ம நபர் தொடர்பு கொண்டு மனைவியை விவகரத்து செய்ய வேண்டும்,  அவளுடன் சேர்ந்து வாழக் கூடாது என மிரட்டியுள்ளார். அந்த செல்போன் எண்ணை வைத்து காவல்துறை துப்பு துலக்கியது.

அதேபோல சம்பவத்தன்று சிசிடிவி காட்சிகளில் அப்பகுதியில் ஒரு டாக்ஸி டிரைவர் சந்தேகத்திற்குரிய முறையில் நடந்துகொண்டதை போலீசார் கவனித்தனர். இந்த விவரங்களின் அடிப்படையில் சம்பந்தபட்ட டாக்ஸி டிரைவரான சிவ் சங்கர் முகிய்யா என்ற நபரை கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில் அந்த பெண்ணை கொலை செய்தது சிவ் சங்கர் தான் என அவர் ஒப்புக்கொண்டார். இவருக்கும் அந்த பெண்ணுக்கும் 3 ஆண்டுகளாக பழக்கம் உள்ளது. சிவ் சங்கர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர், வேலைக்காக டெல்லியில் குடும்பத்துடன் தங்கியுள்ளார். சிவ் சங்கருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்த பெண் சுனிதா மீது சிவ் சங்கருக்கு விருப்பம் வரவே தன்னை திருமணம் செய்யுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். கணவரை விவகரத்து செய்து விடு என தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க:  “உன்னை ரொம்ப மிஸ் பண்றேன் என் அழகு பொம்மையே”... நடிகைக்கு காதலைப் பிழிந்து கடிதம் எழுதிய சுகேஷ் சந்திரசேகர்..!

377

இதற்கு சுனிதா மறுப்பு தெரிவித்த நிலையில், ஆத்திரத்தில் பெண்ணின் வீட்டிற்கு சென்று தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர் உடலை வேறு இடத்தில் போட்டுவிட்டு தப்பி சென்றுள்ளார். டிரைவர் சிவ் சங்கரிடம் ஒப்புதல் வாக்குமூலத்தை பெற்ற காவல்துறை அவர் மீது  கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தது. திருமணமாகி 3 குழந்தைகளின் தாயாக இருக்கும் பெண்ணை, 4 குழந்தைகள் உள்ள தந்தை அடுத்த திருமணத்திற்கு கட்டாயப்படுத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:Crime News, Delhi, Murder

முக்கிய செய்திகள்