PREVNEXT
முகப்பு / செய்தி / பொழுதுபோக்கு / புவனா, செல்வா மீது லாரியை விட்டு மோதிய உமா - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

புவனா, செல்வா மீது லாரியை விட்டு மோதிய உமா - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

அன்னம் வீட்டுக்கு வரும் புவனா, செல்வா மீது லாரியை விட்டு மோதிய உமா என அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் புவனா தாலி பிரித்து கோர்க்க அம்மா வீட்டிற்கு கிளம்ப வேண்டும் என சொல்ல உமாவும் அண்ணியும் அவளை திட்டுகின்றனர். செல்வா அவர்களை எதிர்த்து பேசிவிட்டு அவளை அழைத்துக் கொண்டு கிளம்புகிறான்.

பிறகு உமா பழனியிடம் நம்ம விஷயத்துல ஒருத்தன் குறுக்க வந்தா அவன் அண்ணனாலும் சரி தம்பியானாலும் சரி விடக் கூடாது, அவங்க போற வண்டியை ஒரு தட்டு தட்டுங்க என சொல்கிறாள். மறுபக்கம் அமுதா கோவிலுக்கு வந்து பூ வாங்க, பூக்கார பாட்டி செந்திலை பூ வாங்கி குடுக்குமாறு சொல்கிறார். இங்கே புவனாவும் செல்வாவும் வரும் காரை லாரி ஒன்று பாலோ செய்து வருகிறது.

இதையும் படிங்க; பைரவிக்கு முன்பே ரஜினி நாயகனாக நடித்தப் படம் எது தெரியுமா?

பிறகு அமுதா தாலியை வைத்து சாமி கும்பிட செந்திலின் அப்பா ஆவியாக வந்து அமுதாவிடம் நீ தான் இந்த குடும்பத்த காப்பாத்த வந்த சாமி என சொல்கிறார். மேலும் புவனாவுக்கு ஆபத்து என சொல்கிறான். இண்டர் கட்டில் லாரி செல்வா காரை நெருங்குகிறது.

அடுத்து புவனா, செல்வா வந்த காரை லாரி அடித்து தூக்குகிறது. வீட்டில் அமுதாவும் மற்றவர்களும் காத்திருக்க உமா அன்னத்திற்க்கு போன் செய்து புவனா, செல்வா வந்த வண்டி ஆக்சிடெண்ட் ஆயிடுச்சு என சொல்ல அன்னம் ஷாக்காகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

top videos
  • புதுகை ஸ்ரீவெங்கடாஜலபதி கோவில் கும்பாபிஷேக விழா.. முளைப்பாரி எடுத்த பெண்கள்..
  • அதென்ன பாதிரி மாம்பழம்..? மயிலாடுதுறையில் ஃபேமஸாகும் புது மாம்பழ வகை..!
  • புதுவை கௌசிக பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக உற்சவம்!
  • திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா..! பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!
  • விராலிமலை முருகன் கோயில் வைகாசி தேரோட்டம்.. திரளான பக்தர்கள் தரிசனம்..
  • Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Tags:TV Serial, Zee Tamil Tv

    முக்கிய செய்திகள்