PREVNEXT
முகப்பு / செய்தி / பொழுதுபோக்கு / பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீடு.. ஓகே சொன்ன கமல்.. ரஜினி பதில் என்ன? எகிறும் எதிர்பார்ப்பு!

பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீடு.. ஓகே சொன்ன கமல்.. ரஜினி பதில் என்ன? எகிறும் எதிர்பார்ப்பு!

இரண்டாம் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக யார் கலந்துகொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே காணப்பட்டது.

ஜெயம் ரவி - கமல்ஹாசன்

ஜெயம் ரவி - கமல்ஹாசன்

ஐந்து பாகங்கள் கொண்ட கல்கியின் பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று புதினத்தை இரண்டு பாகங்கள் கொண்ட திரைப்படமாக மணிரத்னம் இயக்கியிருந்தார். முதல் பாகம் உலக அளவில் கடந்த வருடம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகி பாக்ஸ் ஆபிசில் ரூ.400 கோடிகளுக்கும் அதிகமாக வசூலித்தது. இதனையடுத்து மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது.

சமீபத்தில் இந்தப் படத்திலிருந்து அக நக பாடல் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இது வந்தியத் தேவன் - குந்தவைக்கு இடையேயான பாடலாக அமைந்துள்ளது. சமீபத்தில் ஒரு நிகழ்வில் பேசிய நடிகை சுஹாசினி, மணிரத்னம் இயக்கிய காதல் காட்சிகளில் பொன்னியின் செல்வன் வந்தியத்தேவன் - குந்தவை இடையேயான காதல் காட்சி தான் தனது ஃபேவரைட் எனவும் இரண்டாம் பாகத்தில் அந்த காட்சி பெரும் வரவேற்பு பெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

 

இந்த நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 29 ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெறவிருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இந்தப் படத்தின் டிரெய்லரும் வெளியிடப்படவிருக்கிறது

377

முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழில் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டிருந்தது படத்தின் புரமோஷனுக்கு பெரிதும் உதவியது. தற்போது இரண்டாம் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக யார் கலந்துகொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே காணப்பட்டது.

இந்த நிலையில் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பாடல்கள் மற்றும் டிரெய்லரை வெளியிடவிருப்பதாக மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது. இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்த்தும் இந்த நிகழ்வில் கலந்துகொள்வாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

Tags:Kamal Haasan, Mani ratnam, Ponniyin selvan

முக்கிய செய்திகள்