அஜித் குமாரின் அப்பா பி.சுப்பிரமணியம் இன்று அதிகாலை 3.15 மணியளவில் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
நடிகர் விஜய் நேரில் சென்று அஜித் குமார் மற்றும் அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். முன்னதாக அவரது உடல் பெசன்ட் நகரில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அப்போது அவரது உடலைப் பார்த்து அஜித்தின் தாய் கதறி அழ, அவரைக் கட்டிப்பிடித்து நடிகர் அஜித் ஆறுதல் கூறினார். இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்தது.
இந்த நிலையில் அஜித் குமாரின் சகோதரர் அனில் குமார் யூடியூப் சேனல் ஒன்றில் தனது அப்பா குறித்து பேசியது வைரலாகிவருகிறது. அந்த வீடியோவில், எங்கள் பெற்றோர்கள் எங்களை மிகுந்த கட்டுப்பாட்டுடன் வளர்க்கவில்லை. நிறைய சுதந்திரம் கொடுத்தாங்க. எங்க அப்பா ஒரு ரிபெல். படிப்பில் அவருக்கு பெரிய ஆர்வம் இல்லை. ஆனால் அவர் மிகுந்த புத்திசாலி. இண்டர்நெட்டை வெகு சுலபமாக கையாள்வார். அப்போ எனக்கு தோணுச்சு. இவரு டிகிரி வாங்கல. ஆனால் புத்திசாலினு தோணுச்சு.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Actor Ajith