PREVNEXT
முகப்பு / செய்தி / பொழுதுபோக்கு / காவல்துறை நிகழ்ச்சிக்கு விக்னேஷ் சிவனை எப்படி கூப்பிட்டாங்க? பங்கமாய் கலாய்த்த உதயநிதி

காவல்துறை நிகழ்ச்சிக்கு விக்னேஷ் சிவனை எப்படி கூப்பிட்டாங்க? பங்கமாய் கலாய்த்த உதயநிதி

வாட்ஸ் அப்பில் வர தகவல்களை உண்மை என நம்பி பகிர்கிறோம். இதனால் சட்ட ஒழுங்கு பிர்சனை வருகிறது.

உதயநிதி ஸ்டாலின் - விக்னேஷ் சிவன்

உதயநிதி ஸ்டாலின் - விக்னேஷ் சிவன்

போதைப் பொருள் பழக்கத்திற்கு எதிராக சென்னை பெருநகர காவல்துறை சார்பில் குறும்பட போட்டி நடத்தப்பட்டது. இந்தக் குறும்பட போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய விக்னேஷ் சிவன், ‘சமீப காலமாக எந்த ஒரு சினிமா நிகழ்ச்சியிலும் நான் கலந்துகொள்வதில்லை. என்னுடைய ரெட் ஜெயண்ட் நிறுவனத்தில் இருந்து வெளியே வந்துவிட்டேன். கடந்த வருடம் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை உலகமே வியந்து பாராட்டியது. அதனைத் தொகுத்து வழங்கி அதனை இயக்கியது விக்னேஷ் சிவன் தான். காவல் துறை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிக்கு அவரை எப்படி தேர்வு செய்தாங்கனு தெரியல. அவரோட முதல் படத்தின் பெயரே நானும் ரௌடி தான். அதுக்கு அப்றோம் காத்து வாக்குல ரெண்டு காதல். அவர் எடுக்கிற ஒவ்வொரு முயற்சியையும் சிறப்பா செய்திட்டு வருகிறார். அவருக்கு என் வாழ்த்துகள் என்றார். சிங்கம் 1, 2, 3, சாமி 1, 2, 3னு சினிமால பார்த்திருப்போம். போலீஸ் படங்களை பார்த்திருப்போம்.

உண்மையாவே சிங்கங்களாக, தமிழ் நாட்டை காக்கக்கூடிய சாமிகளாக இருக்கக் கூடிய காவல்துறை அதிகாரிகளுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாடு முதல்வரின் தலைமையில் போதைப்பொருள் தடுப்பு முயற்சியை எடுத்துட்டுவருகிறோம்.

இதற்கு மாணவர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இது வாட்ஸ் அப் தகவல்களை நம்புகின்ற ஒரு யுகம். மாணவர்களாகிய நீங்கள் பகுத்தறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். வாட்ஸ் அப்பில் வர தகவல்களை உண்மை என நம்பி பகிர்கிறோம். இதனால் சட்ட ஒழுங்கு பிர்சனை வருகிறது. இதுபோன்ற முயற்சிகள் தொடர வேண்டும் என்று பேசினார்.

Tags:Director vignesh shivan, Udhayanidhi Stalin

முக்கிய செய்திகள்