PREVNEXT
முகப்பு / செய்தி / பொழுதுபோக்கு / அடேங்கப்பா! சிம்புவின் 'பத்து தல' பட முதல் நாள் வசூல் இவ்வளவா?

அடேங்கப்பா! சிம்புவின் 'பத்து தல' பட முதல் நாள் வசூல் இவ்வளவா?

பத்து தல, விடுதலை படங்களுக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்துவருவதால் வரும் நாட்களில் இரண்டு படங்களுக்கும் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்பு

சிம்பு

சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபேலி என்.கிருஷ்ணா, சிம்பு நடிப்பில் பத்து தல படத்தை இயக்கியிருக்கிறார். கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெற்றிபெற்ற மஃப்டி படத்தின் தமிழ் பதிப்பாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது. இந்தப் படத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர், கௌதம் மேனன், கலையரசன், ரெடின் கிங்ஸ்லி, டிஜே அருணாசலம், கவிஞர் மனுஷ்யபுத்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்தப் படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. குறிப்பாக சிம்புவின் நடிப்புக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் பின்னணி இசைக்கும் பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன. சிம்பு டிரான்ஸ்ஃபர்மேஷனுக்கு பிறகு நடித்த மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வணிக ரீதியாக வெற்றிப் படமாக அமந்தன.

தனுஷின் அடுத்த படம் என்ன தெரியுமா?

அந்த வரிசையில் பத்து தல படமும் அவருக்கு ஹாட்ரிக் வெற்றியைக் கொடுக்கும் எனவும் அவரது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில் இந்தப் படம் முதல் நாளில் ரூ.12.3 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் அறிவித்துள்ளது. இதுவரை வெளியான சிம்பு படங்களில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் என்று சாதனை படைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

377

இந்த நிலையில் இன்று வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள விடுதலை படத்தின் முதல் பாகம் இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்துக்கும் நல்ல விமர்சனங்கள் கிடைத்துவருவதால் வரும் நாட்களில் இரண்டு படங்களுக்கும் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:Simbu

முக்கிய செய்திகள்