PREVNEXT
முகப்பு / செய்தி / பொழுதுபோக்கு / எல்லாம் ரெடி.. 3 நிமிட ட்ரெய்லர்.. அடுத்த ரேஸுக்கு தயாராகும் பொன்னியின் செல்வன்!

எல்லாம் ரெடி.. 3 நிமிட ட்ரெய்லர்.. அடுத்த ரேஸுக்கு தயாராகும் பொன்னியின் செல்வன்!

பொன்னியின் செல்வன் 2 படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் மார்ச் 29-ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

பொன்னியின் செல்வன் 2

பொன்னியின் செல்வன் 2

'பொன்னியின் செல்வன் 2' இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் இப்படம் ஏப்ரல் 28-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. சமீபத்தில் பொன்னியின் செல்வன் 2 படத்தில் இடம்பெற்றிருக்கும் 'அக நக' என்ற முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

மணிரத்னமும் ஏ.ஆர்.ரஹ்மானும் பிஎஸ்-2 படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் மும்முரமாக இருப்பதை தங்கள் புகைப்படங்களை வெளியிட்டு தெரியப்படுத்தினர். இந்த மாத இறுதிக்குள் படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடையும் எனத் தெரிகிறது. தயாரிப்பாளர்கள் ஏற்கனவே மால்கள் மற்றும் பிற பொது இடங்களில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் புரொமோஷனை தொடங்கியுள்ளனர். இதன் அடுத்தக் கட்டமாக ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு இருக்கும்.

பொன்னியின் செல்வன் 2 படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் மார்ச் 29-ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. தற்போது, PS-2 படத்தின் ட்ரெய்லர் சென்சார் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. 3 நிமிடங்கள் மற்றும் 25 வினாடிகள் கொண்ட இந்த டிரெய்லர் ஆடியோ வெளியீட்டு விழாவில் வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொன்னியின் செல்வன் 2 படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கிறது. வெளியீட்டிற்கு முன்னதாக முதல் பாகத்தைப் போலவே படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் இந்தியா முழுக்க ப்ரொமோஷனில் ஈடுபடுவார்கள்.

top videos
  • புதுகை ஸ்ரீவெங்கடாஜலபதி கோவில் கும்பாபிஷேக விழா.. முளைப்பாரி எடுத்த பெண்கள்..
  • அதென்ன பாதிரி மாம்பழம்..? மயிலாடுதுறையில் ஃபேமஸாகும் புது மாம்பழ வகை..!
  • புதுவை கௌசிக பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக உற்சவம்!
  • திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா..! பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!
  • விராலிமலை முருகன் கோயில் வைகாசி தேரோட்டம்.. திரளான பக்தர்கள் தரிசனம்..
  • Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Tags:Actor Jayam Ravi, Actor Vikram, Actress Trisha, Ponniyin selvan

    முக்கிய செய்திகள்