PREVNEXT
முகப்பு / செய்தி / பொழுதுபோக்கு / சூர்யாவுடன் மோதத் தயாராகும் நடிகர் மகேஷ் பாபு? - கடுமையாகும் போட்டி..!

சூர்யாவுடன் மோதத் தயாராகும் நடிகர் மகேஷ் பாபு? - கடுமையாகும் போட்டி..!

இந்த போஸ்டரில் மகேஷ் பாபு ஸ்டைலான தோற்றம் மற்றும் லேசான தாடியுடன் சிகரெட் புகைத்து கொண்டு சாலையில் நடந்து செல்ல, அடியாட்கள் அவரை வணங்குகிறார்கள்.

சூர்யா - மகேஷ் பாபு

சூர்யா - மகேஷ் பாபு

அல்லு அர்ஜுனின் அல வைகுந்தபுரமுலோ படத்தின் மூலம் இந்திய ரசிகர்களின் கவனம் ஈர்த்த இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் அடுத்ததாக மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்கிவருகிறார். இதற்குமுன் மகேஷ் பாபு - திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இணைந்த அத்தடு, கலேஜா படங்கள் பெரும் வெற்றிபெற்ற நிலையில் இந்தப் படமும் ஹாட்ரிக் வெற்றியாக அமையுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இந்தப் படத்திற்காக மகேஷ் பாபு தனது உடல் அமைப்பை முற்றிலும் மாற்றி நடித்திருக்கிறார். இந்தப் படத்தை தயாரித்துள்ள ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ் நிறுவனம் புதிய போஸ்டருடன் இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது. அதன் படி இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி பொங்கல் மற்றும் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | 10 பெண்களுடன் தகாத உறவு... பிரபல நடிகரின் விவாகரத்துக்கு காரணம் இதுதானா? வெளியான தகவல்..!

இந்த போஸ்டரில் மகேஷ் பாபு ஸ்டைலான தோற்றம் மற்றும் லேசான தாடியுடன் சிகரெட் புகைத்து கொண்டு சாலையில் நடந்து செல்ல, அடியாட்கள் அவரை வணங்குகிறார்கள். இந்த போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தப் படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் தேசிய விருது பெற்ற நவின் நூலி எடிட்டிங் பணிகளை மேற்கொள்ள, தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் எஸ்.தமன் இசையமைக்கிறார். பி.எஸ்.வினோத் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

அடுத்த ஆண்டு பொங்கல் மற்றும் சங்கராந்தியை முன்னிட்டு பிரபாஸின் புராஜெக்ட் கே, ராம் சரண் - இயக்குநர் ஷங்கரின் கேம் சேஞ்சர், சூர்யாவின் 42வது படம் ஆகியவை ரிலீஸாகவிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் போட்டி மிக கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:Actor Suriya, Mahesh babu

முக்கிய செய்திகள்