PREVNEXT
முகப்பு / செய்தி / பொழுதுபோக்கு / மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழா? - ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழா? - ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு

அந்த வகையில் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்தப் படத்திலிருந்து அக நக என்ற பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் - மணிரத்னம்

ஏ.ஆர்.ரஹ்மான் - மணிரத்னம்

கல்கியின் பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்தை அதே பெயரில் இரண்டு பாகங்கள் கொண்ட திரைப்படமாக இயக்கினார் மணிரத்னம். எம்ஜிஆர் துவங்கி கமல்ஹாசன் வரை பலரது கனவுப் படமான இதனை இயக்குநர் மணிரத்னம் வெற்றிகரமாக உருவாக்கி சாதித்திருக்கிறார். முதல் பாகம் கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரசிகர்களின் பேராதரவால் உலக அளவில் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

இதனையடுத்து இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. அந்த வகையில் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்தப் படத்திலிருந்து அக நக என்ற பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் இந்தப் படத்தின் அனைத்து பாடல்களும் வருகிற 29 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

அன்றைய தினம் தான் இந்தப் படத்தின் டிரெய்லரும் வெளியாகவிருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இசை வெளியீட்டு விழா குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலனாக விக்ரம், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத்தேவனாக கார்த்தி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக திரிஷா, பெரிய பழுவேட்டையராக சரத்குமார், சுந்தர சோழராக பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைக்கா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

377

Tags:AR Rahman, Mani ratnam, Ponniyin selvan

முக்கிய செய்திகள்