PREVNEXT
முகப்பு / செய்தி / பொழுதுபோக்கு / அப்படி என்ன பாவம் செய்தோம்? - மறைந்த கணவர் சேதுராமன் குறித்து அவரது மனைவி உருக்கம்

அப்படி என்ன பாவம் செய்தோம்? - மறைந்த கணவர் சேதுராமன் குறித்து அவரது மனைவி உருக்கம்

இப்படி நடக்க நாம் அப்படி என்ன பாவம் செய்தோம். அன்றோடு எல்லாம் முடிந்தது. நான் என் அறையின் கதவை மூடிக்கொண்டு அழுதுகொண்டே இருக்கப்போகிறேன்

மறைந்த நடிகர் சேதுராமனின் மனைவி உமா

மறைந்த நடிகர் சேதுராமனின் மனைவி உமா

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சேதுராமன். இந்தப் படம் வெற்றிப்படமாக அமைந்து அவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. தொடர்ந்து வாலிப ராஜா சக்கபோடு போடு ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

அடிப்படையில் மருத்துவரான இவர் சென்னையில் தோல் நோய்களுக்கான சிகிச்சை அளித்துவந்தார். சேதுராமனுக்கும் உமா என்பவருக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.

 

இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அப்போது அவருக்கு வயது 37 தான். அவரது மறைவு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இறப்பதற்கு முந்தைய தினம் தான் கொரோனா குறித்து விழிப்புணர்வு வீடியோவை அவர் பகிர்ந்திருந்தார்.

377

சேதுராமனின் 3 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது மனைவி உமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், வாழ்க்கை மிக கடினமானது. ஏன் எனக்கு இப்படி? இவ்வளவு இளம் வயதில் ஏன் ஒரே இரவில் வாழ்க்கை இருளாக மாற வேண்டும்.

இப்படி நடக்க நாம் அப்படி என்ன பாவம் செய்தோம். அன்றோடு எல்லாம் முடிந்தது. நான் என் அறையின் கதவை மூடிக்கொண்டு அழுதுகொண்டே இருக்கப்போகிறேன். என் கண்ணீர் அனைத்தும் வடியும் வரை. என்னை சுற்றி இருப்பவர்களுக்காக நான் கவலைப்படப்போவதில்லை. ஏன் என்னால் தடுக்க முடியவில்லை. என் அன்பிற்குரியவரின் மரணத்தின் காரணம் குறித்து யோசித்துக்கொண்டே இருக்க போகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். அவருக்கு பலரும் தங்களது ஆறுதலை தெரிவித்து வருகின்றனர்.

 

Tags:Instagram

முக்கிய செய்திகள்