வயாகாம்18 நிறுவனத்தின் பொழுபோக்கு தமிழ் சேனலான கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், தொடர்கள் மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. இதன் நிகழ்ச்சிகள் அனைத்தும் பார்வையாளர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வரிசையில் தற்போது புதிதாக அமானுஷ்ய தொடரான ‘பிசாசினி’ என்னும் தொடரை மார்ச் 27ம் தேதி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
மிகவும் பிரபல இந்தி தொடரான பிசாசினி தற்போது தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு தமிழ் ரசிகர்களைக் கவரும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரின் கதையானது ராணி என்ற பெண்ணின் வாழ்க்கையை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. அவள் தன்னிடம் அசாதாரண சக்திகள் இருப்பதைக் கண்டுபிடித்து, அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை கற்றுக் கொண்டு செயல்படுகிறாள். அவ்வாறு செய்யும்போது அவள் வாழ்க்கையில் என்னென்ன சம்பவங்கள் நிகழ்கிறது என்பதே இந்த தொடரின் கதையாகும். இந்தத் தொடரில் முக்கிய வேடங்களில் நைரா பானர்ஜி, ஜியா சங்கர் மற்றும் ஹர்ஷ் ராஜ்புத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மேலும் ஷ்ரே மிட்டல், ரேமன் சிங், அமித் மெஹ்ரா மற்றும் சுஷில் பராஷர் போன்ற மற்ற கலைஞர்கள் இந்த புதிய தொடரில் புதிரான மாயாஜால உலகத்தில் உங்களை மகிழ்விக்க இருக்கிறார்கள். இந்த தொடர் வரும் 27–ந்தேதி இரவு 9 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. கற்பனை மிகுந்த அமானுஷ்ய உலகில் மறக்க முடியாத பயணத்திற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்த தொடருடன் இந்த தொலைக்காட்சியின் புகழ்பெற்ற தொடர்களான பொம்மி பி.ஏ.பி.எல் மற்றும் நாகினி ஆகிய தொடர்களும் ஒளிபரப்பாக உள்ளது. இதில் பொம்மி பி.ஏ.பி.எல். இந்த தொடர் ஏப்ரல் 3ம் தேதி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. நாகினி தொடர் மார்ச் 27, திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Colors Tamil | கலர்ஸ் தமிழ்