PREVNEXT
முகப்பு / செய்தி / பொழுதுபோக்கு / ’அப்பாவை நன்றாக பார்த்துக்கொண்டார்’ - அஜித் குறித்து விக்னேஷ் சிவன் பகிர்ந்த தகவல்!

’அப்பாவை நன்றாக பார்த்துக்கொண்டார்’ - அஜித் குறித்து விக்னேஷ் சிவன் பகிர்ந்த தகவல்!

நடிகர் அஜித்தின் தந்தை மறைவுக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் இரங்கல் தெரிவித்துள்ளார்

அஜித் குமார் - விக்னேஷ் சிவன்

அஜித் குமார் - விக்னேஷ் சிவன்

நடிகர் அஜித்தின் தந்தை பி.சுப்பிரமணியம் கடந்த 3 ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் இன்று அதிகாலை 3.15 மணிக்கு காலமானார். அவரது உடல் பெசன்ட் நகரில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இதற்கு முன்பாக நடிகர் அஜித் குமாரின் இல்லத்திற்கு இயக்குநர் விஜய், தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன், நடிகர்கள் மிர்ச்சி சிவா, பிரசன்னா உள்ளிட்ட பலர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரும் அஜித் இல்லத்திற்கு சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

நடிகர் அஜித்தின் தந்தை காலமானார்.!

இதன் ஒரு பகுதியாக நடிகர் விஜய் பெசன்ட் நகர் மின்மயானத்திற்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்த திட்டமிட்டார். ஆனால் அதற்குள் இறுதி சடங்கு நடைபெற்று முடிந்துவிட்டன. இந்த நிலையில் நடிகர் அஜித்தின் இல்லத்திற்கு நேரில் சென்ற விஜய் அஜித்திற்கும் அவரது குடும்பத்திற்கும் ஆறுதல் கூறினார்.

top videos
  • புதுகை ஸ்ரீவெங்கடாஜலபதி கோவில் கும்பாபிஷேக விழா.. முளைப்பாரி எடுத்த பெண்கள்..
  • அதென்ன பாதிரி மாம்பழம்..? மயிலாடுதுறையில் ஃபேமஸாகும் புது மாம்பழ வகை..!
  • புதுவை கௌசிக பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக உற்சவம்!
  • திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா..! பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!
  • விராலிமலை முருகன் கோயில் வைகாசி தேரோட்டம்.. திரளான பக்தர்கள் தரிசனம்..
  • இதன் ஒரு பகுதியா இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள இரங்கல் பதிவில், மனப்பூர்வமான இரங்கலை அஜித் சாருக்கு தெரிவித்துக்கொள்கிறேன். அவர் தனது தந்தையை எப்பொழுதும் நன்றாக பார்த்துக்கொண்டார். இது அவர் தனது பெற்றோரிடம் கொண்டுள்ள அன்பை காட்டுகிறது. இழப்பை தாங்கிக்கொள்ள குடும்பத்தாருக்கு சக்தியையும் அமைதியையும் அளிக்குமாறு கடவுளை பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

    Tags:Actor Ajith

    முக்கிய செய்திகள்