PREVNEXT
முகப்பு / செய்தி / பொழுதுபோக்கு / பிச்சை எடுக்கும் ஷங்கரின் உதவி இயக்குநர்: அப்படி என்ன ஆச்சு இவருக்கு? சோக கதை

பிச்சை எடுக்கும் ஷங்கரின் உதவி இயக்குநர்: அப்படி என்ன ஆச்சு இவருக்கு? சோக கதை

சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளாகியிருக்கிறார். இவர் குறித்த தகவல்கள் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செல்வேந்திரன் - இயக்குநர் ஷங்கர்

செல்வேந்திரன் - இயக்குநர் ஷங்கர்

கடந்த சில வருடங்களாக தமிழில் ஆண்டுக்கு சராசரியாக 200 படங்கள் வெளியாகின்றன. வாரத்துக்கு அதிகபட்சம் 7 படங்களாவது வெளியான வண்ணம் இருக்கின்றன. இதில் வெற்றிபெற்ற படங்கள் என்றால் மிக மிக குறைவு. பல திரைப்படங்கள் வெளியான சுவடே தெரியாமல் காணாமல் போகின்றன. நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என ஒரு படத்துக்கு ஆயிரக்கணக்கானோர் பணியாற்றுகின்றனர். படம் வென்றால் மட்டுமே அவர்களால் அடுத்த கட்டத்துக்கு நகர முடியும். அப்படி வென்றவர்கள் என்று பார்த்தால் வெகு சிலரே.

சினிமாவில் சாதிக்க வேண்டும் என வந்து தோற்றவர்களின் கதை திரைப்படங்களை விட அதிக டிவிஸ்டுகளை கொண்டதாக இருக்கின்றன. சமீபத்தில் பிதாமகன் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை தயாரித்த துரை என்ற தயாரிப்பாளர் தனது மருத்துவ செலவுக்கு கூட காசில்லாம் தவிக்கும் செய்திகள் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தன. அந்த வகையில் தற்போது இயக்குநர் ஒருவர் பிச்சை எடுப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இயக்குநர் பாரதிராஜா, ஷங்கர் போன்ற இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் செல்வேந்திரன். இயக்குநர் ஷங்கரிடம், காதலன், ஜீன்ஸ், இந்தியன் ஆகிய வெற்றிப் படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.

இதனையடுத்து ஒரு காதலன் ஒரு காதலி என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் தான் ராய் லக்ஷ்மி தமிழில் நாயகியாக அறிமுகமானார். மேலும் ரம்பா இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து ஒரு கட்டத்தில் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளாகியிருக்கிறார். இவர் குறித்த தகவல்கள் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரைப்பட இயக்குநர்கள் சங்கம் அவருக்கு உதவ வேண்டும் என கோரிக்கை  எழுந்துள்ளது.

377

Tags:Director Shankar

முக்கிய செய்திகள்