PREVNEXT
முகப்பு / செய்தி / பொழுதுபோக்கு / பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீ உடல்நிலை சீராக உள்ளது... குடும்பத்தினர் தகவல்..!

பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீ உடல்நிலை சீராக உள்ளது... குடும்பத்தினர் தகவல்..!

பிரபல பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீ உடல்நிலை சீராக இருப்பதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாம்பே ஜெயஸ்ரீ

பாம்பே ஜெயஸ்ரீ

மின்னலே திரைப்படத்தில் இடம்பெற்ற வசீகரா என்ற பாடலை பாடியதன் மூலம் மிகவும் பிரபலமான பாம்பே ஜெயஸ்ரீ. தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் முத்திரை பதித்துள்ளார்.

வெளிநாடுகளில் அதிகம் நிகழ்ச்சிகளுக்கு செல்பவர் பாம்பே ஜெயஸ்ரீ. அந்த வகையில் லண்டன் இசை நிகழ்ச்சிக்காக சென்ற அவர் எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்ததாகவும், அதில் அவரின் தலை பகுதியில் பலத்த அடிபட்டு சுயநினைவை இழந்ததாகவும் கூறப்பட்டது. இதையடுத்து லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில் பாம்பே ஜெயஸ்ரீ-க்கு நேற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

 

top videos
  • புதுகை ஸ்ரீவெங்கடாஜலபதி கோவில் கும்பாபிஷேக விழா.. முளைப்பாரி எடுத்த பெண்கள்..
  • அதென்ன பாதிரி மாம்பழம்..? மயிலாடுதுறையில் ஃபேமஸாகும் புது மாம்பழ வகை..!
  • புதுவை கௌசிக பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக உற்சவம்!
  • திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா..! பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!
  • விராலிமலை முருகன் கோயில் வைகாசி தேரோட்டம்.. திரளான பக்தர்கள் தரிசனம்..
  • இந்நிலையில், பாம்பே ஜெயஸ்ரீயின் உடல்நிலை சீராக உள்ளதென்று அவரின் ட்விட்டர் கணக்கில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.  அதில், “பாம்பே ஜெயஸ்ரீக்கு லண்டனில் உடல்நிலை சரி இல்லாமல் போனது. உரிய நேரத்தில் அவருக்கு சிகிச்சையும் வழங்கப்பட்டது. அவரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. இன்னும்  சில நாட்களுக்கு அவர் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

    377

    Tags:Health

    முக்கிய செய்திகள்