PREVNEXT
முகப்பு / செய்தி / பொழுதுபோக்கு / நீ தான் பெஸ்ட் - சாயிஷாவின் பத்து தல பாடல் குறித்து ஆர்யா கமெண்ட்

நீ தான் பெஸ்ட் - சாயிஷாவின் பத்து தல பாடல் குறித்து ஆர்யா கமெண்ட்

ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்துள்ள பத்து தல படம் வருகிற மார்ச் 30 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது.

ஆர்யா - சாயிஷா

ஆர்யா - சாயிஷா

சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபேலி என்.கிருஷ்ணா சிம்பு நடிப்பில் பத்து தல படத்தை இயக்கியிருக்கிறார். கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெற்றிபெற்ற மஃப்டி படத்தின் தமிழ் பதிப்பாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது. இந்தப் படத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர், கௌதம் மேனன், கலையரசன், ரெடின் கிங்ஸ்லே, டிஜே அருணாசலம், கவிஞர் மனுஷ்யபுத்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகை சாயிஷா நடனமாடிய ராவடி வீடியோ பாடல் இன்று மாலை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. திருமணத்துக்கு பிறகு நடிகை சாயிஷா கவர்ச்சிகரமாக நடனமாடியிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில் இந்தப் பாடல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஆர்யா தெரிவித்திருப்பதாவது, பெரிய திரையில் உன்னைப் பார்ப்பதற்காக காத்திருக்கிறேன். நீ சிறந்தவள். இது ஒரு தொடக்கம் தான் என குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்துள்ள பத்து தல படம் வருகிற மார்ச் 30 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இந்தப் படத்துடன் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள விடுதலை படத்தின் முதல் பாகமும் வெளியாகவிருப்பதால் இரண்டு படங்களுக்கும் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:Actress Sayyeshaa, Simbu

முக்கிய செய்திகள்