PREVNEXT
முகப்பு / செய்தி / பொழுதுபோக்கு / குட்டி ரசிகையின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் விஜய்... வைரலாகும் வீடியோ..!

குட்டி ரசிகையின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் விஜய்... வைரலாகும் வீடியோ..!

சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ஒரு குழந்தையின் வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் நடிகர் விஜய் அங்கிள் என்னை பார்க்க வாருங்கள் என ஒரு சிறிய குழந்தை கூறி இருந்தது.

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

நடிகர் விஜய்யை பார்க்க வேண்டும் என்ற குழந்தையின் வீடியோ வைரலான நிலையில், அந்தக் குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் நடிகர் விஜய் வீடியோ காலில் உரையாடியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் படம், ‘லியோ’. கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. பான்-இந்தியன் ஆக்‌ஷன் படமான 'லியோ'வில் விஜய் கேங்ஸ்டராக நடிக்கிறார்.

கடந்த ஒரு மாதமாக காஷ்மீரில் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இதில் 500க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டனர். லியோ படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் சமீபத்தில் நிறைவடைந்தது. படக்குழுவினர் காஷ்மீரில் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசிய வீடியோவை தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் வெளியிட்டிருந்தது. இதனையடுத்து இந்தப் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் விரைவில் துவங்கப்படவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ஒரு குழந்தையின் வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் நடிகர் விஜய் அங்கிள் என்னை பார்க்க வாருங்கள் என ஒரு சிறிய குழந்தை கூறி இருந்தது. அந்த வீடியோ நேற்று முழுவதும் வைரலாக பரவியது.

இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் அந்த வீடியோவை விஜய்யின் கவனத்திற்கு எடுத்துச் சென்றனர்.  இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் இன்று அந்த குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசினார்.

377

மேலும், அவர்கள் பற்றி நலம் விசாரித்ததுடன் குழந்தையை ஒரு நாள் நேரில் அழைத்து வாருங்கள் என்றும் கூறியுள்ளார். விஜய்யின் இந்த செயலால் அந்த குழந்தை மற்றும் குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Tags:Actor Vijay, Viral Video

முக்கிய செய்திகள்