PREVNEXT
முகப்பு / செய்தி / பொழுதுபோக்கு / தந்தையின் மறைவு: தனது முதல் பட தயாரிப்பாளரைப் பார்த்து அஜித் செய்த காரியம் - பார்த்திபன் பகிர்ந்த தகவல்

தந்தையின் மறைவு: தனது முதல் பட தயாரிப்பாளரைப் பார்த்து அஜித் செய்த காரியம் - பார்த்திபன் பகிர்ந்த தகவல்

நடிகர் அஜித்தின் பண்பு குறித்து பார்த்திபன் முக்கிய தகவலைப் பகிர்ந்துள்ளார்.

அஜித் - பார்த்திபன்

அஜித் - பார்த்திபன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமாரின் தந்தை பி.சுப்பிரமணியம் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று அதிகாலை காலமானார். இவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் சிகிச்சை பெற்றுவந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அஜித் குமாரின் தந்தை சுப்பிரமணியத்தின் உடல் பெசன்ட் நகரில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு அஜித்குமாரின் தம்பி, அனில் குமார் இறுதிச் சடங்குகளை செய்ததாக கூறப்படுகிறது. திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் அஜித்தின் வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு ஆறுதல் கூறினர். மேலும் நடிகர் விஜய்யும் நேரில் சென்று அஜித் மற்றும் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறியது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

 

இந்த நிலையில் நடிகர் அஜித்தின் பண்பு குறித்து பார்த்திபன் முக்கிய தகவலைப் பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில், தந்தையின் மறைவின்போது, நண்பர் அஜித் உள்ளூரில் இருந்தது நல்லது. சோகத்தைப் புதைத்துக்கொண்டு வந்தவர்களுக்கு நன்றி சொன்னார்.

மயானம் செல்ல தயாரானபோது காரில் அமர்ந்தவர் என்னருகில் சோழா பொன்னுரங்கம் (அமரவாதி தயாரிப்பாளர்) நிற்பதைக் கண்டு இறங்கிவந்து நன்றி சொல்லிச் சென்ற பண்பு அவருக்கானது என்று குறிப்பிட்டிருந்தார்.

377

Tags:Actor Ajith

முக்கிய செய்திகள்