PREVNEXT
முகப்பு / செய்தி / பொழுதுபோக்கு / Video: சென்னை வந்ததும் அஜித் வீட்டுக்குச் சென்ற சூர்யா மற்றும் கார்த்தி.. நேரில் சந்தித்து ஆறுதல்!

Video: சென்னை வந்ததும் அஜித் வீட்டுக்குச் சென்ற சூர்யா மற்றும் கார்த்தி.. நேரில் சந்தித்து ஆறுதல்!

கடந்த வெள்ளியன்று சூர்யாவும், கார்த்தியும் சென்னையில் இல்லாத நிலையில், இன்று சென்னை திரும்பிய இருவரும், நடிகர் அஜித்தின் இல்லத்திற்கு நேரில் சென்றனர்

சூர்யா

சூர்யா

நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் நடிகர் அஜித்தை சந்தித்து அவரின் தந்தை மறைவிற்கு இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமாரின் தந்தை பி.சுப்பிரமணியம் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானார். இவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதனை அடுத்து, அஜித் குமாரின் தந்தை சுப்பிரமணியத்தின் உடல் பெசன்ட் நகரில் உள்ள மின்மயானத்தில் தகனம் வெள்ளிக்கிழமை அன்றே தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு திரையுலகினர் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். நடிகர் விஜய், அஜித்தின் வீட்டுக்கே சென்று ஆறுதல் கூறினார். இந்நிலையில் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் நடிகர் அஜித்தை சந்தித்து அவரின் தந்தை மறைவிற்கு இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினர்.

கடந்த வெள்ளியன்று சூர்யாவும், கார்த்தியும் சென்னையில் இல்லாத நிலையில், இன்று சென்னை திரும்பிய இருவரும், நடிகர் அஜித்தின் இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு ஆறுதல் கூறினர்.

377

Tags:Ajithkumar

முக்கிய செய்திகள்