PREVNEXT
முகப்பு / செய்தி / சென்னை / சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்காபூர்வாலா பதவியேற்பு

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்காபூர்வாலா பதவியேற்பு

Chennai highcourt judge | கங்காபூர்வாலா, சென்னை உயர்நீதிமன்றத்தின் 33வது தலைமை நீதிபதி ஆவார்.

கங்காபூர்வாலா

கங்காபூர்வாலா

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா இன்று காலை பதவியேற்றார். 

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனிஷ்வர்நாத் பண்டாரி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார். அதனை அடுத்து பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி துரைசாமி ஓய்வு பெற்றதை அடுத்து, மூத்த நீதிபதியான டி.ராஜா, பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் டி.ராஜா கடந்த 24ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, அடுத்த மூத்த நீதிபதியாக இருந்த வைத்தியநாதன், பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், மும்பை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலாவை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக குடியரசுத்தலைவர் நியமித்தார்.

கார் ரேஸில் ஈடுபட்ட சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரின் மகன் மீது வழக்கு

மர்ம காய்ச்சலால் 3 வயது குழந்தை பலி.. ஆவடியில் சோகம்..

பிரேக்கிற்கு பதிலாக ஆக்ஸிலரேட்டரை மிதித்ததால் நடந்த கோர சம்பவம்.. L போர்டு வாகனம் மோதியதில் ஒருவர் பலி

ஏசி-யில் தீப்பிடித்து விபத்து.... சென்னையில் தாய், மகள் உயிரிழந்த சோகம்

அதிமுகவுடன் பாஜக தேசிய தலைமை சமரச பேச்சுவார்த்தை நடத்துகிறது - கிருஷ்ணசாமி

சென்னையில் நாளை பவர்கட்.. உங்க ஏரியா இருக்கான்னு தெரிஞ்சுக்கோங்க

கனமழை எதிரொலி: சைதாபேட்டையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்தது - மீட்புப் பணிகள் தீவிரம்

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.. சம ஊதியம் கேட்டு ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

சைதாப்பேட்டை பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்ததில் ஒருவர் பலி, 13 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை

சென்னையில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் பாதிப்பு? இனி உரிமையாளருக்கு ரூ.10,000 அபராதம்

பெட்ரோல் பங்க் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. பங்க் ஓனர் மற்றும் மேலாளர் மீது வழக்கு பதிவு....

இந்தநிலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்காபூர்வாலா பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கங்காபூர்வாலா, சென்னை உயர்நீதிமன்றத்தின் 33வது தலைமை நீதிபதி ஆவார்.

இதில், உயர் நீதிமன்ற நீதிபதிகள், அரசு உயர் அதிகாரிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர். மேலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க | "அக்னி நட்சத்திரத்திற்கு டாட்டா"- கத்திரி வெயில் இன்றுடன் நிறைவு!

கேரள மாநில முன்னாள் கவர்னர் ஓய்வுபெற்ற நீதிபதி சதாசிவம், உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் உள்ளிட்டோரும் வருகை தந்துள்ளனர். தலைமை செயலாளர் இறையன்பு, உள்துறை செயலர் அமுதா, முதலமைச்சரின் தனிச்செயலாளர் முருகானந்தம், பொதுத்துறைசெயலாளர் ஜெகநாதன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

377

Top Videos
  • திருமஞ்சன பூஜை... நடராஜப் பெருமானுக்கு 11 வகையான திரவியங்களால் அபிஷேகம்!
  • Tags:Chennai, Chennai High court, Judge

    முக்கிய செய்திகள்