இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்களை, கள்ளச்சந்தையில் விற்ற 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 21 ரன்களில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. 3 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கத்தில் சர்வதேச போட்டி நடைபெற்றதால், போட்டியைக் காண ரசிகர்களிடம் ஆர்வம் அதிகமாக இருந்தது.
இந்த போட்டியை 36 ,400 பேர் நேரில் கண்டுரசித்தனர். இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை பெறுவதற்கு ரசிகர்கள் காலை 2 மணி முதலே வரிசையில் காத்திருந்து டிக்கெட்டுகளை வாங்கிச்சென்றது பார்க்கமுடிந்தது.
திருட சென்ற இடத்தில் வசமாக சிக்கிய திருடன்... சினிமா பாணியில் தப்ப முயன்றபோது நேர்ந்த சோகம்!
துப்பட்டா அணியாத பெண்களே டார்க்கெட்... சென்னையில் பகீர் சம்பவம்
ஆட்டோவில் பயணிக்க ஒருநாள் முழுவதும் இலவசம்... சிஎஸ்கே வெற்றியை கொண்டாடும் தீவிர தோனி ரசிகர்!
பேருந்து ஸ்டிரைக் விவகாரம்: பொது மக்களிடம் கூடுதல் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது- சென்னை மாநகர காவல்
சென்னையில் நெரிசல் குறைகிறது..? வேளச்சேரி - ஆலந்தூர் பறக்கும் ரயில் திட்டம் பற்றி முக்கிய அப்டேட்..!
ஆதரவற்ற மூதாட்டியிடம் வழிப்பறி செய்த ஆட்டோ ஓட்டுநர் அதிரடி கைது...!
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்காபூர்வாலா பதவியேற்பு
ஒரு நாளைக்கு 5 பெண்கள் டார்கெட்.. டீ சர்ட் பெண்கள் மீது மோகம்.. ‘மன்மதன்’-க்கு மாவுகட்டு போட்ட சென்னை போலீஸ்..!
சென்னை மக்களே உஷார்... நாளை குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!
செங்கோலில் உள்ள நந்தி அனைத்து மதத்திற்கும் பொதுவான தர்ம தேவதை... தருமபுரம் ஆதினம் விளக்கம்!
ரயில் பயணிகள் கவனத்திற்கு... சென்னை கடற்கரை - சேப்பாக்கம் இடையே ரயில் சேவை ரத்து...!
இந்நிலையில் கள்ளச்சந்தையில் இந்தியா ஆஸ்திரேலியா போட்டிக்கான டிக்கெட் விற்பனை நடைபெறுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். அப்போது சட்டவிரோதமாக கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்களை விற்பனை செய்ததாக 13 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக 6 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 14,500 ரூபாய் மதிப்பிலான 32 டிக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Chepauk, Cricket, Ind Vs Aus, India vs Australia