PREVNEXT
முகப்பு / செய்தி / வணிகம் / ரேசன் கார்டு வைத்திருப்பவர்கள் அவசியம் தெரிஞ்சுக்கோங்க! தொலைந்தால் இதைத்தான் செய்யணும்!

ரேசன் கார்டு வைத்திருப்பவர்கள் அவசியம் தெரிஞ்சுக்கோங்க! தொலைந்தால் இதைத்தான் செய்யணும்!

Ration Card: ரேசன் கார்டு திடீரென தொலைந்து விட்டால் என்ன செய்வது? ஒருவேளை அப்படி நடந்தால், நீங்கள் முதலில் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

மாதிரி படம்

மாதிரி படம்

அரசின் எந்த ஒரு முக்கிய திட்டமாக இருந்தாலும் ரேசன் கார்டு என்பது தேவையானதாக இருக்கிறது. அப்படியான ரேசன் கார்டு திடீரென தொலைந்து விட்டால் என்ன செய்வது? ஒருவேளை அப்படி நடந்தால், நீங்கள் முதலில் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? உடனே ஆன்லைனில் ஈஸியாக விண்ணப்பிப்பது.

உங்கள் கையில் செல்போன் இருந்தால் போதும் இதை 20 நிமிடத்தில் செய்து முடிக்கலாம். அதற்கான படிகள் இதோ

1. தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று லாகின் செய்ய வேண்டும். https://www.tnpds.gov.in/

2. இப்போது நீங்கள் பதிவு செய்துள்ள தொலைப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் ஒரு ஒடிபி எண் வரும். அதனைக் கொண்டு உங்கள் சுயவிவர பக்கத்திற்கு உள்நுழையவும்.

தண்ணீர் குடிக்கும்போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்..

3. இப்போது, நீங்கள் TNPDS ஸ்மார்ட் கார்டு பதிவிறக்கம் மற்றும் அச்சிடுவதற்கான டேப்-ஐ பார்ப்பீர்கள். (இதில் கூடுதல் வசதிகளான பெயர் நீக்குதல், மாற்றுதல், சேர்த்தல் போன்ற வசதிகளும் இருக்கும்)

4. உங்களுடைய மொழியைத் தேர்ந்தெடுத்து அதன் பின்பு PDF ஃபைலை சேமிக்க, சேமி என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.அதன் பின்பு அந்த பக்கத்தை பிரிண்ட் எடுத்துக்கொள்ளவும்.

377

5. உங்கள் பகுதிக்கு உட்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்திற்குச் சென்று இந்த நகலை சமர்ப்பித்தால் போதும் உங்களுக்கு மீண்டும் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும்.

top videos
  • சென்னை வந்த அமித்ஷா - சாலையில் திடீரென விளக்குகள் அணைந்ததால் பரபரப்பு
  • பாதங்களை தொட்டு வணங்க கடமைப்பட்டிருக்கிறேன்: முதல்வர் ஸ்டாலின்
  • பாஜக தமிழ்நாட்டுக்கு என்ன கொடுத்தது தெரியுமா? பட்டியலிட்ட முதலமைச்சர் மு க ஸ்டாலின்
  • இயற்கை பொருட்களை கொண்டு 15 அடி நீளத்தில் மீன் பொம்மை.. பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க முயற்சி!
  • கோவை மக்களே பள்ளி உபகரணங்கள் வாங்கனுமா? இங்க வாங்க எல்லாமே கிடைக்கும்!
  • இதுத் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 1800 425 5901 என்ற ஹெல்ப்லைனில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளுங்கள்.

    Tags:Ration card

    முக்கிய செய்திகள்