அமெரிக்காவில் சிலிக்கான் வேலி வங்கி மற்றும் சிக்னேச்சர் வங்கிகள் திவால் ஆன நிலையில், சுவிட்சர்லாந்தை சேர்ந்த கிரெடிட் சூயிஸ் வங்கி கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதன் எதிரொலியாக இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளின் செயல் திறன் மற்றும் நிதி அபாயங்களில் இருந்து மீள்வதற்கான திறன் குறித்து நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு மேற்கொண்டார்.
இதையும் படிக்க : மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கும் இனி இன்சூரன்ஸ்..!
அப்போது, வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்படுவதால் ஏற்படும் இழப்பு குறித்த அபாயங்களில் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தினார். உலகளாவிய நிதி அழுத்தங்களை கண்காணித்து தொலைநோக்கு பார்வையுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Bank, FINANCE MINISTER NIRMALA SITHARAMAN, Public sector banks