கோவை ஈஷா இயற்கை விவசாய பண்ணையில் காய்கறி சாகுபடி குறித்த இலவச பயிற்சி மார்ச் 25-ம் தேதி நடைபெறுகிறது.
தைவானில் உள்ள உலக காய்கறி மையம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் காய்கறி விவசாயிகளுக்கான இலவச பயிற்சி கோவையில் மார்ச் 25-ம் தேதி நடைபெற உள்ளது.
செம்மேட்டில் உள்ள ஈஷா இயற்கை விவசாய பண்ணையில் நடைபெறும் இப்பயிற்சியில் ரசாயனங்களை பயன்படுத்தாமல் இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யும் வழிமுறைகள் குறித்து வேளாண் வல்லுநர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர்.
கோவை மக்களே பள்ளி உபகரணங்கள் வாங்கனுமா? இங்க வாங்க எல்லாமே கிடைக்கும்!
பைக் டாக்சிகளுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை... அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திட்டவட்டம்..!
மேட்டுப்பாளையத்தில் வணிக வளாகத்திற்கு நுழைந்த காட்டு யானைகள்... மிரண்டுபோன பொதுமக்கள்
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை... கோவை சிறையில் மின்சார சைக்கிளைக் கண்டுபிடித்த கைதி...
Luxury காரில் போட்டோ ஷூட்..! கோவையில் சொகுசு கார்கள் வாடகைக்கு எடுக்கனுமா?
கம்பங்கூழ் வாங்கினா Unlimited சைட்டிஷ்.. கோவையை கலக்கும் பவர் ஹவுஸ் பாண்டி!
தோஷங்களை நீக்கும் கோவை விஷ்ணுமாய ஆலயம்.. எங்க இருக்கு தெரியுமா?
பஸ் டிக்கெட் ரூ.5 தான்.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கோவை தனியார் பஸ் நிறுவனம்..
Portable Stove : சுற்றுலா போறவங்களுக்காகவே இந்த குட்டி கேஸ் அடுப்பு.. இதன் விலை எவ்வளவு தெரியுமா?
சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகள்... கோவையில் இளைஞர்கள் வீட்டில் காவல்துறை சோதனை...
கோவையை காக்கும் சூப்பர் ஹீரோஸ்! அப்படி என்ன செய்கிறார்கள் தெரியுமா?
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் இயக்குநர்கள், பேராசிரியர்கள், முன்னோடி விவசாயிகள் பங்கேற்று ஆலோசனைகள் வழங்க உள்ளனர். மேலும், மண் காப்போம் இயக்கத்தின் பயிற்சியாளர்கள் மாதிரி பண்ணையை விவசாயிகளுக்கு சுற்றி காண்பித்து பல்வேறு விவசாய தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளிக்க உள்ளனர்.
மார்ச் 25-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த இலவச பயிற்சியில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் 83000 93777, 94425 90077 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்வது அவசியம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Agriculture, Coimbatore, Isha